• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மழை காலங்களில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

மழை காலங்களில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

மழை காலங்களில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

மழை காலங்களில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

மழைக் காலங்களில் மழை நீர் பெருகி , அருகில் உள்ள சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிவதாபுரம் பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனை தடுக்கும் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்க்கொண்டார்.

  • Share this:
சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவதாபுரம் அருகில் உள்ள சுமார் 70 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட சேலத்தாம்பட்டி ஏரி உள்ளது . இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் அருகில் உள்ள தாமரை ஏரி நிரம்பி அதன் உபரி நீர் தளவாய்ப்பட்டி ஏரிக்கு சென்று அதன் உபரி நீரும் , வளையப்பட்டி ஏரியும் நிரம்புகிறது. இதனால் வரக்கூடிய உபரி நீரும் சேலத்தாம்பட்டி ஏரிக்கு வருவதால் மழைக்காலங்களில் இந்த ஏரி அடிக்கடி நிரம்பி திருமணிமுத்தாறு சென்று கலக்கின்றது . இதனால் மழைக் காலங்களில் மழை நீர் பெருகி , அருகில் உள்ள சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிவதாபுரம் பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இந்த நிலையில் சேலத்தாம்பட்டி ஏரியில் மழைக் காலங்களில் மழை நீர் பெருகி , அருகில் உள்ள சிவதாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளுக்குள் நீர் புகுவதைத் தடுத்து , இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் சாத்தியக் கூறுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் செ. கார்மேக , சேலம் மாநகராட்சி ஆணையாளர் டி.கிறிஸ்துராஜ் , ஆகியோர் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் .



பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கூறும்போது, ”சேலம் மாவட்டம் , சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேலத்தாம்பட்டி ஏரி மழைக்காலங்களில் மழை நீர் பெருகி வாய்க்காலின் வழியாக சாலைகளில் வழிந்தோடுவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகின்றது என்ற தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து , இப்பகுதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது” என்றார்.

மேலு, “ வீடுகளில் மழை நீர் புகுவதை தடுத்திடவும் , இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சேலம் மாநகராட்சி , ஊரக வளர்ச்சித் துறை , வருவாய்த் துறை , நெடுஞ்சாலைத் துறை , பொதுப் பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் நேரில் கலந்தாலோசித்து தக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க... Petrol-diesel Price | இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

இந்த ஆய்வின்போது சேலம் மாநகர பொறியாளர் திரு.ஏ. அசோகன் , சேலம் மேற்கு வருவாய் வட்டாட்சியர் திருமதி தமிழரசி , சேலம் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் மரு.பார்த்திபன் , சேலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திரு . வி . ரங்கராஜன் , நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநர் திரு.சி. சுப்பிரமணியன் , உதவிப் பொறியாளர் திரு.ஆர்.மோகன்ராஜ் உட்பட வருவாய்த் துறை வளர்ச்சித் துறை , சேலம் மாநகராட்சி , நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர் .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: