• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெண் காவல் ஆய்வாளரை மிரட்டினாரா பாமக எம்.எல்.ஏ? - வைரல் ஆடியோ

பெண் காவல் ஆய்வாளரை மிரட்டினாரா பாமக எம்.எல்.ஏ? - வைரல் ஆடியோ

PMK Mla

PMK Mla

பெண் காவல் ஆய்வாளரை மிரட்டும் பாமக எம்.எல்.ஏ ஆடியோ வெளியாகி பரபரப்பு...

  • Share this:
பெண் காவல் ஆய்வாளர் தன்னை ஒருமையில் திட்டியதாக டிஜிபி யிடம் பாமக  எம்.எல்ஏ புகார் அளித்த நிலையில் பெண் காவல் ஆய்வாளரை மிரட்டும் பாமக எம்.எல்.ஏ ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வாக இருப்பவர் இரா.அருள். சேலம் அழகாபுரம் இராஜாராம் நகர் பகுதியைச் சார்ந்த இவர், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளராகவும், சட்டமன்ற பாமக கொறடா வாகவும் உள்ளார்.

கடந்த 05-09-2021 அன்று இரும்பாலை காவல் நிலைய ஆய்வாளர்  சந்திரலேகா மீது தமிழ்நாடு காவல் துறை தலைவர் (டிஜிபி) இடம், எம்.எல்.ஏ அருள் புகார் மனு கொடுத்ததாகவும், அந்த  மனுவின் நகலும் சமூக வலைதளங்களில் பரவியது.

அதில், நான் சட்டமன்றத்தில் 31.08.2021 அன்று பேசியது போல் சேலம் மேற்கு தொகுதி கருக்கல்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் கயிறு வண்டிகளில் லோடு ஏற்றுபவர்களே டிரைவர்களாகவும் வருவார்கள் . வியர்வை அதிகமாக இருக்கும் என்பதால்  ஓட்டுநர் சீருடையை கழற்றி வண்டியில் மாட்டிக்கொண்டு பனியனுடன் வருவார்கள்.

இதற்காகவும், கயிறுலோடு சில நேரம் உயரமாக இருக்கும் காரணத்திற்காகவும் அந்த கூலி தொழிலாளர்களின் மினி டோர் வண்டிக்கு தலா ரூ .2000 ரூபாயும்,  மது அருந்திவிட்டு செல்லும் இருசக்கர வாகனத்தை பிடுங்கி வைத்துக்கொண்டு ரூ .5000 / - மும் புரோக்கர்கள் மூலம் லஞ்சம் வாங்கும் சேலம் இரும்பாலை காவல் ஆய்வாளர் சந்திரலேகா அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தயவு செய்து ஏழைகளிடம் அவர்கள் செய்யும் தவறுக்கு முடிந்த அளவு எச்சரித்து குறைந்த பட்ச அபராதம் போடுங்கள் மேடம். அளவுக்கு அதிகமாக லஞ்சம் கேட்காதீர்கள் .

Also read:  இறந்த பாஜக தலைவரின் உடலை நாயின் சடலத்துடன் ஒப்பிட்ட மம்தா பானர்ஜி!

தயவுசெய்து உங்கள் எல்லையில் உள்ள 16 சந்துக்கடைகளில் மாமூல் வாங்கிக்கொண்டு மது விற்க அனுமதிக்கிறீர்கள் அதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது . தயவு செய்து சந்துக்கடைகளை தடுத்து நிறுத்தங்கள் என வேண்டுகோளாக சனிக்கிழமை 4.9.2021 அன்று இரவு 9.11 மணியளவில் கேட்டதாகவும், அதற்கு  என்னிடம் அவர் ஒருமையில் MLA என்றாலும் மந்திரி என்றாலும் என்னை ஒன்றும் புடுங்க முடியாது . நீ உன் வேலையை பார் . எந்த பிரச்சனையானாலும் என்னால் சந்திக்க முடியும் , வை போனை என என்னை மிகவும் அவமதித்தது மட்டுமல்லாமல் தான் பணி புரிந்த அனைத்து இடங்களிலும் பெரும் பணத்தை லஞ்சமாக பெற்று வருமானத்திற்கு அதிகமாக லஞ்சமாக கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கின்ற லஞ்ச ஊழல் காவல் ஆய்வாளர் மீது முழுமையாக இவர் பணிபுரிந்த அனைத்து இடங்களிலும் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுத்திட கேட்டுக்கொள்கிறேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது எம்.எல்.ஏ அருள் இரும்பாலை காவல் ஆய்வாளர் சந்திரலேகாவிடம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

Also read:  கூட்டுறவு நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியனாக உயர்த்தும் – அமித் ஷா

சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்த அருள் அங்கிருந்து தொலைபேசி மூலம் காவல் ஆய்வாளரை தொடர்புகொண்டு பேசிய, அந்த ஆடியோவில் சட்டமன்ற உறுப்பினர் அருள், பாமக வை ஒழிக்கப்பார்க்கின்றீர்களா? பாமக வினர் அனைவர் மீதும் பொய் வழக்கு போடுகிறீர்களா? எனவும்  நீங்கள் ஒருமையில் பேசுகிறீர்கள் என்றும் பல்வேறு இடங்களில் 50,000 ஒரு லட்சம் என கையூட்டு பெற்றுக் கொண்டு பணி செய்து வருகிறீர்கள் எனவும் கூறியதோடு, சட்டமன்ற உறுப்பினர் ஆகிய நான் உங்கள் மீது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும் பெண் காவல் ஆய்வாளரை மிரட்டி உள்ளார்

இதற்கு பெண் காவல் ஆய்வாளர் தங்களை இதுவரை ஒரு முறை கூட ஒருமையில் பேசவில்லை சார் என்றும் எங்கேயாவது கையூட்டு பெற்றிருந்தால் அவர்களை சொல்ல சொல்லுங்கள் சார்  என்றும்,  சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால்  டூட்டியில் இருக்கும் என்னை நீங்க தான் சார் மிரட்டுகிறீர்கள் என்றும் கூறியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதனிடையே ஒரு வயதான தம்பதியர்களின் நிலத்தை எழுதி வாங்கும் முயற்சியில் பாமக வை சார்ந்த சிலர்  ஈடுபட்டதாகவும்,   இது குறித்து வயதான தம்பதிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு, பாமகவினரை காவல் ஆய்வாளர் எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதற்காக தான் காவல் ஆய்வாளரை எம்எல்ஏ மிரட்டியதாகவும், முந்திக்கொண்டு டிஜிபியிடம் புகார் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

Also read:  பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு – முழு விவரம்!

இது தொடர்பாக காவல் ஆய்வாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.

எம்.எல்.ஏ அருள் கூறும் போது, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் பலர் என்னிடம் புகார் தெரிவித்ததால் அதை நான் ஆய்வாளரிடம் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொண்டதாகவும், அவர் ஒருமையில் பேசியதாலும் டிஜிபி யிடம் புகார் கொடுத்தேன். இப்போது வெளியாகியிருக்கும் ஆடியோ முழுமையானதாக இல்லாமல் வெட்டபட்ட ஆடியோ. இந்த ஆடியோ வெளியிட்டு, என் மீது அவதூறு பரப்புவதால் எனக்கு கவலை இல்லை. அவர்கள் திருந்த வேண்டும். எத்தனை பேர் லஞ்சம் கொடுத்துள்ளார்களோ அவர்களை என்னால் நேரில் நிறுத்த முடியும் என்றார்.

ஆய்வாளர் உங்களை ஒருமையில் பேசிய ஆடியோ உள்ளதா? என்ற கேள்விக்கு... என்னிடம் தொலைபேசியில் பேசுவதை ஆடியோ பதிவு செய்யும் பழக்கம் எனக்கு இல்லை.  ஆடியோ வெளியிட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: