குழந்தை திருமணங்கள் நடக்காத வண்ணம் துறை அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும்: அமைச்சர் திருமதி பி . கீதா ஜீவன் 

குழந்தை திருமணங்கள் நடக்காத வண்ணம் துறை அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும்: அமைச்சர் திருமதி பி . கீதா ஜீவன் 

அனைத்து பகுதிகளையும் தொடர்ந்து கண்காணித்து குழந்தை திருமணங்கள் நடக்காத வண்ணம் துறை அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும் என்று சேலத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பி . கீதா ஜீவன் கூறியுள்ளார். 

  • Share this:
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , சேலம் , நாமக்கல் , கிருஷ்ணகிரி , தருமபுரி , திருப்பூர் , ஈரோடு , கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலர்களுக்கான மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது . இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு முதன்மை செயலாளர் திரு.ஷம்பு கல்லோலிகர், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் , ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குநர் திருமதி வே.அமுதவள்ளி , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் திருமதி த . ரத்னா , சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் திருமதி வி . வளர்மதி , சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு . எஸ்.ஆர் . பார்த்திபன் அவர்கள் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு . இரா . இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

இக்கூட்டத்திற்கு மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள் தலைமையேற்று , ஒவ்வொரு மாவட்டம் வாரியாக மாவட்ட சமூக நல அலுவலர்கள் , ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர்கள் , சமூக பாதுகாப்பு துறை அலுவலர்கள் உள்ளிட்ட துறை அலுவலர்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்தும் , துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் , நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது,  ”தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். ஒவ்வொரு திட்டமும் காலதாமதமின்றி தகுதியான நபர்களுக்கு சென்று சேர்த்திட வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள் .



குழந்தை திருமணங்களை தடுத்து அவர்களின் எதிர்காலத்தினை பாதுகாக்கும் வகையில் குழந்தை திருமணங்கள் தடுப்பு சட்டம் முறையாக அனைத்து பகுதிகளிலும் கண்காணிக்கப்படுகின்றதா என்பது குறித்தும் , குழந்தை திருமணங்களை தடுத்திட மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகின்றது . குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் , குழந்தை திருமணங்கள் தடுப்பு சட்டம் குறித்தும் , அவ்வாறு குழந்தை திருமணங்கள் நடைபெற்றால் இச்சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்பது குறித்தும் மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் . அனைத்து பகுதிகளையும் தொடர்ந்து கண்காணித்து குழந்தை திருமணங்கள் நடக்காத வண்ணம் துறை அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும் .

மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பெண்கள் முன்னேற்றத்திற்கும் , பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கும் , மக்களின் வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள் . அவ்வாறு செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்து முழுமையாக நிறைவேற்றிட துறை அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க... வீடுகளில் இனி இந்தக் கருவியை பொருத்தாவிட்டால்.. மின் இணைப்பு கிடையாது!

முன்னதாக , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் குழந்தைகள் , பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான குடும்ப வன்முறை சட்டம் , பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடைச்சட்டம் , வரதட்சணை தடுப்புச்சட்டம் , குழந்தை திருமண தடுப்புச்சட்டம் , பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச்சட்டம் , பணிபுரியும் மகளிர் விடுதி பதிவு சட்டம் , பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டம் ஆகிய சட்டங்கள் குறித்து துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது .
Published by:Vaijayanthi S
First published: