திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என சேலத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் முருகன் வெங்கடாஜலம் கூறினார். மேலும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களை மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
சேலம் கிழக்கு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் மூன்றாவது வருடாந்திர கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தமிழ்நாடு தலைவரும், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவருமான முருகன் வெங்கடாஜலம் ஆகியோர் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து துறையில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. ஒரு குண்டூசியை நகர்த்தி வைப்பதற்குக் கூட பல ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வழங்கும் நிலைமைக்கு மோட்டார் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, தேர்தல் காலத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்துத்துறை சீரமைக்கப்படும், எவர் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் தற்பொழுது ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலம் ஆகப்போகிறது. வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து துறையில் மட்டும் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றார்.
வருகின்ற மே மாதத்திற்குள் இதனை சீர்படுத்தி எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் ஒவ்வொரு மாவட்டம் தோறும், தெருக்கள் தோறும் பல்வேறு தொடர் போராட்டம் நடத்தப்படும். அடுத்தகட்டமாக, கோட்டையை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
Must Read : திமுக ஆட்சியில் 754 கோவில்களில் அன்னதானம்.. ஆனால் அதிமுக ஆட்சியில் வெறும் 34 மட்டுமே - அமைச்சர் சேகர்பாபு
மேலும், தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன் அவர்களை உடனடியாக மாற்ற வேண்டும். அந்த துறையில் உள்ள ஊழல் வாதிகளை கண்டறிந்து அவர்கள் மீது பதவி நீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.