Home /News /tamil-nadu /

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு : சேலத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம் 

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு : சேலத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Salem : சேலம் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்திய ராணுவத்தின் வலிமையை பிரதிபலிக்கும் வகையில் ராணுவ வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மற்றும் ராணுவ தளவாடங்களின் அணிவகுப்பு நடைபெறும்.

    அத்துடன் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு தமிழக ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

    Must Read : தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசு: மீனவர் சங்கத்தினர் கண்டனம்

    மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Read More : வேலுநாச்சியார், வஉசி உருவங்களுடன் தயாரான அலங்கார ஊர்திகள்-மத்திய அரசுக்கு பதிலடி கொடுக்கும் தமிழக அரசு

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    செய்தியாளர் - திருமலை, சேலம்
    Published by:Suresh V
    First published:

    Tags: Communist Party, CPI, Protest

    அடுத்த செய்தி