பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வருகிற 30-ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை ஏறக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒன்றிய அரசின் வரி விதிப்பு தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு அடிப்படை காரணம் என்று குற்றம் சாட்டிய முத்தரசன், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்ற 30ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன சைக்கிள் பேரணி நடத்தப்படும் என்றார்.
இலங்கை அரசுடன் இந்திய அரசு நட்புடன் பழகி பல்வேறு உதவிகளை செய்து வந்த போதிலும், தமிழக மீனவர்கள் பற்றி கவலை கொள்வதில்லை என்ற நிலைதான் நீடித்து வருகிறது என்றும் முத்தரசன் குற்றம்சாட்டினார். 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களை விவசாயத் தொழில்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய முத்தரசன், இதுதொடர்பாக அரசு உரிய ஆய்வு நடத்தி நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் அறிவாளிகளுக்கு அரசியல்வாதிகளுக்குமே போதிய புரிதல் இல்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார். மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு நேரடியாக பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Must Read : இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம் (அக்டோபர் 20)
மக்கள் பிரச்சனைகள் பற்றி கவலை கொள்ளாமல், தங்களை தற்காத்துக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவரின் நடவடிக்கைகள் உள்ளது என்றும் முத்தரசன் விமர்சித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CPI, Petrol Diesel Price hike