கொரோனா நோய் பரவலை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்காமல், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் முதல்வரை ஏமாற்றுகிறார்கள், இதில் முதல்வர் தனிகவனம் செலுத்த வேண்டும் என்று அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை முதல்வருக்கு வேண்டுகோள்.
சேலத்தில் அ.தி.மு.க அமைப்பு செயலாளர் செம்மலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, “கொரோனா நோய் பரவலை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட பொருப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் முதல்வரை ஏமாற்றுகிறார்கள். இதில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் முதல்வரிடம் நல்ல பெயரை வாங்க அமைச்சர்கள் கொரோனா இறப்பை குறைத்து காட்டுகிறார்கள்,சேலம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் உயிரிழப்பு பேனர்களே உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் தனியார் மருத்துவமனை மீது புகார் அளித்து உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சேலம் மாவட்டத்தில் போதிய தடுப்பூசி இருப்பு உள்ளதாக அரசு கூறுவது முழுவதும் பொய் என்றும் பேசினார்.
மேலும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கையும் அறிவித்து விட்டு சென்னையில் இருந்து 6 லட்சம் பேர் அவரவர் ஊர்களுக்கு செல்ல போக்குவரத்து வசதியையும் ஏற்படுத்தி கொடுத்து கொரோனா பரவலை அதிகரிக்க செய்துள்ளது. ஊரடங்கில் தளர்வு அளித்து தமிழகத்தில் தொற்று அதிகரிக்க அரசே வழிவகை செய்துள்ளது; இது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் கூறினார். சேலம் மாவட்டத்தில் முறையான அழைப்பு வந்தால் அ.தி.மு.க மற்றும் கூட்டணி எம்எல்ஏக்கள் அரசு கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பார்கள் என்றார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.