சேலத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாத அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம்!

சேலத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாத அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம்!

பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டும் உள்ளார்களா என சேலம் அம்மாபேட்டை பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் பேருந்துகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சேலத்தில் கொரோனோ நோய்தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

  தமிழகத்தில் கொரோனோ இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதையடுத்து கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.  கடந்த 20-ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. மேலும்  அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளை கொண்டு அமர்ந்து செல்லும் வகையில் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

  இந்த நிலையில் பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டும் உள்ளார்களா என சேலம் அம்மாபேட்டை பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் பேருந்துகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளுக்கு மேல் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது.

  Also read... கோவை திமுக நிர்வாகி மீது அவதூறு பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!

  இந்த நிலையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை  மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்ததுடன் அதிக பயணிகளை ஏற்றி வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 500 ரூபாய் முதல் 5000 வரை அபராதம் விதித்தனர். இன்று காலை முதல் நடத்தப்பட்ட சோதனையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 20,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

  செய்தியாளர்: திருமலை - சேலம்  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: