சேலத்தில் தொடர் மின்வெட்டு.. செல்போன் டார்ச்சை ஒளிரச் செய்து மக்கள் நூதன போராட்டம்

மின்வெட்டை கண்டித்து நூதனப் போராட்டம்

சேலத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் செல்போன்களை ஒளிரச் செய்தும், வீதியில் படுக்கைகளுடன் வந்து அமர்ந்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Share this:
சேலம் மாநகரில் தொடர் மின்வெட்டால்  பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சேலம் மாநகர் பட்டை கோவில் அடுத்துள்ள  பி.வி.அய்யர் தெரு, பூஞ்சன் குட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கைத்தறி நெசவாளர்கள், கூலி தொழிலாளர்கள் என  ஏராளமானோர் உள்ளனர். இங்கு கடந்த சில வாரங்களாக  தொடர் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்களிடம் பல முறை  புகார் தெரிவித்ததாகவும், புகார் தெரிவித்து எந்த  வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Also Read:  கைக்குழந்தையை அமெரிக்க வீரர்களிடம் கொடுக்கும் தாய்- கண்கலங்க வைக்கும் காபூல் விமானநிலைய காட்சிகள்

இது தொடர்பாக மின் வாரிய ஊழியர்கள் யாரும் நேரில் பார்க்க வராததாலும், உரிய நடவடிக்கை எடுக்காததாலும் நேற்று இரவு மீண்டும் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு வேலைக்கு சென்றிருந்த பொதுமக்கள் வீடு திரும்பிய நிலையில் பல மணி நேரமாக மின் வினியோகம் இல்லாததால் பெரிதும் அவதிபட்டனர்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு  புகார் தெரிவித்துள்ளனர். புகார் தெரிவித்து பல மணி  நேரம் கடந்தும் யாரும் வராததால் அப்பகுதி மக்கள் திடீரென வீடுகளில் இருந்து படுக்கைகளுடன் வீதிக்கு வந்து, சாலையில் பாயைப் போட்டு அமர்ந்து கொண்டதோடு , மொபைல் போன் டார்ச் லைட் அடித்து ஒளிரச் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also Read: கராத்தே சாகச நிகழ்ச்சியில் விபரீதம்.. தீப்பிடித்து இளைஞர் உயிரிழப்பு - புதுக்கோட்டையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கடந்த சில மாதங்களாகவே அப்பகுதியில் தொடர் மின் தடையால்,  பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக மின் விசிறி இயங்காமலும், கொசு தொல்லைகளாலும்  வீடுகளில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஜூன் மாதம் முதலே சேலம் மாநகர் முழுவதும் மின் பராமரிப்பு பணிகள் துவங்கியது. இதில் புதிய மின்கம்பிகள் மாற்றம் செய்யும் பணி மற்றும் மின்கம்பங்களில் பீங்கான் இன்சுலேட்டர் க்கு பதிலாக மின்தடை ஏற்படாத வண்ணம் நவீன பைபர் பொருளால் உருவாக்கப்பட்ட இன்ஸ்லெட்டர் மாற்றப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.   இந்த பணிகள் விரைந்து செயல்பட்டு  ஜூன் மாத இறுதிக்குள் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முக்கிய பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சேலம் மாநகரத்தில் உள்ள  இப்பகுதியில் மின் அழுத்தம் காரணமாக  தொடர் மின்தடை ஏற்படுவதாகவும் கடந்த சில மாதங்களாகவே இது தொடர்கதையாக உள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: