கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் செளமியா. இவர் தலைவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த செளமியாவின் தோழி பிரித்திகா. இருவரும் அதே கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்கள்.
சிறு வயதிலிருந்தே தோழிகளாக பழகி வந்த இவர்கள் இருவரும் பள்ளியிலும் ஒரே வகுப்பில் படித்து முடித்து, ஒரே கல்லூரியில் சேர்ந்தனர். தினமும் கல்லூரிக்கு பேருந்தில் ஒன்றாக சென்று வருவார்கள்.
இந்நிலையில் செளமியாவுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. கொரோனா காரணமாக கல்லூரி திறக்கப்படாததால் ஆன்லைனில் படித்து வந்த நிலையில், கடந்த மாதம் 7ஆம் தேதி தேர்வு எழுதிய பேப்பர்களை கல்லூரிக்கு சென்று கொடுத்து விட்டு வருவதாக இருவரும் புறப்பட்டு சென்றுள்ளனர். ஆனால் அதன் பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை.
Also read: ஒலிம்பிக் களம் கடுமையாக உள்ளது.. இந்திய வீரர்களுக்கு கூடுதல் பயிற்சி தேவை - தாயகம் திரும்பிய ஒலிம்பிக் வீராங்கனைகள் பேட்டி
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்த தகவலும் தெரியவில்லை. இதுகுறித்து தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
இதில் மாணவி ஒருவர் ஆண் போல் உடையணிந்து கொண்டு காதல் ஜோடிகள் போல் பாடல்களுக்கு நடித்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளனர்.
இவர்களை போல் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த பெண்கள் ஜோடியாக பாடல்களைப் பதிவு செய்து வந்துள்ளனர். இதனால் அவர்களுடன் செளமியாவுக்கும், பிரித்திகாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் அவர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனிடைய மாயமான செளமியாவும், பிரித்திகாவும் சென்னைக்கு சென்று அந்தப் பெண்களுடன் தங்கியிருப்பதும் இருவரின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து செல்போன் சிக்னல் மூலம் இருவரும் சென்னை கண்ணகி நகரில் இருப்பதை உறுதி செய்த தலைவாசல் போலீஸார் சென்னைக்கு சென்று இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதில் கல்லூரிக்கு செல்வதாக கூறி சம்பவத்தன்று இருவரும் பஸ்ஸில் சென்னைக்கு சென்று அந்தப் பெண்களுடன் தங்கியிருந்ததும் கையில் எடுத்துச்சென்ற பணம் காலியான நிலையில், அணிந்திருந்த நகையை விற்று ஜாலியாக சுற்றியதும் தெரிய வந்தது.
பின்னர் குடும்பத்தினர் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என கருதி செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து இருவரின் பெற்றோரையும் வரவழைத்த போலீசார் மாணவிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.