முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாராலிம்பிக்கில் பதக்கம்: மாரியப்பனின் உறவினர்கள், நண்பர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பாராலிம்பிக்கில் பதக்கம்: மாரியப்பனின் உறவினர்கள், நண்பர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

மாரியப்பன் தங்கவேலுவின் வெற்றியை தொலைக்காட்சி மூலம் நேரில் கண்ணுற்ற அவரது தாயார் சரோஜா மற்றும் உறவினர்கள் கை தட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 2வது முறையாக பதக்கம் வென்றுள்ள  மாரியப்பனின் செந்த கிராமமான சேலம் மாவட்டம் டேனிஸ்பேட்டை அருகே உள்ள பெரிய வடகம்பட்டியில் உறவினர்கள் வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 24 ம் தேதி தொடங்கி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பங்கேற்றார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் ஏற்கனவே, கடந்த 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி தங்க பதக்கம் வென்றிருந்தார். இதனால் இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டியில் உள்ள அவரது வீட்டில்  அவரது தாயார் சரோஜா, தம்பிகள் குமார், கோபி மற்றும் நண்பர்கள் தொலைக்காட்சி மூலம், மாரியப்பன் உயரம் தாண்டுவதை நேரலையில் கண்டுகளித்தனர். தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளிப் பதக்கத்தை மாரியப்பன் வென்றார்.

இதை படிங்க: பாராலிம்பிக் : ஓரே போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்தியா!

மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். இதன்மூலம் தொடர்ந்து இரண்டு முறை பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று மாரியப்பன் சாதனை படைத்துள்ளார்.   இதுவரை இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றுள்ளது.

மாரியப்பன் தங்கவேலுவின் வெற்றியை தொலைக்காட்சி மூலம் நேரில் கண்ணுற்ற அவரது தாயார் சரோஜா மற்றும் உறவினர்கள் கை தட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவருடைய சகோதரர்களும் நண்பர்களும் உற்சாக மிகுதியில் நடனமாடி மகிழ்ந்தனர்.

மேலும் படிக்க: மாரியப்பன் தங்கவேலு சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி பாராட்டு!

இது குறித்து பேசிய மாரியப்பனின் தாய் சரோஜா,  தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்த்து இருந்ததாகவும் வெள்ளி வென்றதும் மகிழ்ச்சிதான் என்றும் நாட்டிற்காக மீண்டும் ஒரு முறை தன்னுடைய மகன் பதக்கம் வென்றது மகிழ்ச்சி ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பன் இரண்டாவது முறையாக பதக்கம் வென்றிருப்பது பெரியவடக்கம்பட்டி கிராம மக்களையும் அவரது நண்பர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து வெடி வெடித்தும், ஒருவருக்கு ஒருவர் இனிப்பு பரிமாறியும் கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Mariyappan Thangavelu, Salem, Tamilnadu