Home /News /tamil-nadu /

சேலத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகள் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு!

சேலத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகள் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு!

தகவலறிந்த அப்பகுதிக்கு வந்த காவல் உயரதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் முற்றுகையில் ஈடுபட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தகவலறிந்த அப்பகுதிக்கு வந்த காவல் உயரதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் முற்றுகையில் ஈடுபட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தகவலறிந்த அப்பகுதிக்கு வந்த காவல் உயரதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் முற்றுகையில் ஈடுபட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சேலத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகள் நிறுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், விளக்கம் கேட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, மல்லூர் ஆகிய மூன்று பேரூராட்சிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருக்கிறது, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.



இதனிடையே நேற்று இரவு 11 மணி முதல் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் பழுதடைந்து காட்சிப் பதிவுகள் நிறுத்தப்பட்ட நிலையில் உள்ளே எந்த ஒரு கட்சியின் ஏஜென்டுகள் உள்ளிட்ட எவரையும் அனுமதிக்காமல் காவல்துறையினர் வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்...

இந்த நிலையில் தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அதிமுக, பாமக, சுயேச்சை உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஏஜென்ட்கள் வாக்கு எண்ணும் மையத்தில் முன்பு நின்று அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த அப்பகுதிக்கு வந்த காவல் உயரதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் முற்றுகையில் ஈடுபட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள் கூறுகையில், நேற்று தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வாக்குப் பெட்டிகள் வைத்து நள்ளிரவு 11 மணி முதல் சிசிடிவி காட்சிகள் பதிவுகள் நிறுத்தப்பட்ட நிலையில் உள்ளே எந்த ஒரு கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் ஏஜென்ட்களையும் அனுமதிக்காமல் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் வெளியே அனுப்பினர். இதனால் ஆளுங்கட்சியினர் உள்ளே சென்று வாக்கு எந்திரங்களை மாற்றுவதற்கு அதிக அளவில் வாய்ப்பு உள்ளது என்றனர்.

அப்படி நடந்திருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுத்து மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கூறினார்கள். இதில் ஆளும் கட்சியினர் தலையீடு இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர்களும்,  அதிமுக, பாமக  கட்சியை சேர்ந்தவர்களும் குற்றம்சாட்டினார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Local Body Election 2022, Salem

அடுத்த செய்தி