ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காவல்துறையினரை ஒருமையில் பேசியதாக புகார்.. விசிக வன்னி அரசு உட்பட 81 பேர் மீது வழக்கு பதிவு

காவல்துறையினரை ஒருமையில் பேசியதாக புகார்.. விசிக வன்னி அரசு உட்பட 81 பேர் மீது வழக்கு பதிவு

வன்னி அரசு உட்பட 81 பேர் மீது வழக்கு பதிவு

வன்னி அரசு உட்பட 81 பேர் மீது வழக்கு பதிவு

VCK Vanniarasu : சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உட்பட 81 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சேலம் சூரமங்கலம் காவல் உதவி காவல் ஆணையர் நாகராஜ், ஆய்வாளர் சிவக்குமார் ஆகிய இருவரையும் தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசியதாக கிராம நிர்வாக அதிகாரி கோபிநாத் சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் காஜாமைதீன், மாநில துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு உள்ளிட்ட 81 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் மீது கூட்டம் கூடியது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வாகனத்தை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. கெட்ட வார்த்தைகளால் காவல் துறையினரை பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Must Read : தொடக்கப்பள்ளிக்கு முன்கூட்டியே விடுமுறை - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

காவலர்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் அவர்கள் மீது காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Salem, Vanniarasu, VCK