Home /News /tamil-nadu /

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்ற முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று, சேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்ற முன்னாளர் முதல்வரும் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அனுமதியின்றி சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், எம்.எல்.ஏ.க்கள் பாலசுப்பிரமணியம், ராஜமுத்து, சுந்தர்ராஜன், சித்ரா, ஜெய்சங்கர், நல்லதம்பி உள்பட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல, திருச்சி மேலச் சிந்தாமணி அண்ணாசிலை அருகே, அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்சோதி, சிவபதி, பூனாட்சி, அண்ணாவி, முன்னாள் எம்.பி.,க்கள் குமார், ரத்தினவேல் உள்ளிட்ட 550 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாளைய வழக்குகளுக்கான பட்டியல் தயாராகிவிட்டதால், ஜெயக்குமார் மனு வரும் வியாழக்கிழமை பட்டியலிடப்படும் என நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.

    ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க கோரி அவசர முறையீடு செய்யப்பட்டது.

    Must Read : ஹிஜாப் அணிந்து வரக்கூடாது... போளூரில் 12ம் வகுப்பு மாணவியை கண்டித்த அரசுப்பள்ளி ஆசிரியை... பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

    கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவை சேர்ந்தவரை தாக்கி அரை நிர்வாணமாக்கியதாக தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு பிப்ரவரி 20ஆம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Edappadi Palaniswami, Jayakumar

    அடுத்த செய்தி