• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மினி லாரி மீது பைக் மோதி விபத்து: கணவன், மனைவி மற்றும் உறவினரின் பெண்குழந்தை உயிரிழப்பு

மினி லாரி மீது பைக் மோதி விபத்து: கணவன், மனைவி மற்றும் உறவினரின் பெண்குழந்தை உயிரிழப்பு

மினி லாரி மீது பைக் மோதி விபத்து: கணவன், மனைவி மற்றும் உறவினரின் பெண்குழந்தை உயிரிழப்பு

மினி லாரி மீது பைக் மோதி விபத்து: கணவன், மனைவி மற்றும் உறவினரின் பெண்குழந்தை உயிரிழப்பு

சேலம் அருகே மினி லாரி மீது பைக் மோதிய விபத்தில் கணவன், மனைவி மற்றும் உறவினரின் பெண்குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
சேலம் அருகே உள்ள திருமலைகிரி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பசுபதி (30). கூலி தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா (28). இவர்களுக்கு சுபிஷ் (6) என்ற மகனும், திவ்யா (3) என்ற மகளும் உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பட்டியில் பசுபதியின் அக்கா பிரியா வீடு உள்ளது. அவரது வீட்டிற்கு இன்று மாலை 4 மணிக்கு பசுபதி தனது மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் புறப்பட்டு சென்றார். அப்போது அவர்களது 2 குழந்தைகளையும் உடன் அழைத்து செல்லவில்லை.

இதையடுத்து புதுப்பட்டியில் உள்ள அக்கா குடும்பத்தினரை பார்த்துவிட்டு அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர். அப்போது, அவரது அக்கா மகள் மோகப்பிரியாவை (10) உடன் அழைத்து வந்துள்ளார்.

Also read: நாவல் பழங்களை விற்று கடனை அடைக்கும் பள்ளி மாணவி!

அப்போது சேலம் அருகே உள்ள  கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்தபோது, முன்சென்ற மினி லாரி ஒன்று  திடீரென பிரேக் போட்டு ஓரமாக நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய பசுபதி மோட்டார் சைக்கிளுடன் அந்த மினி லாரி மீது மோதினார்.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பசுபதி, அவரது மனைவி கார்த்திகா மற்றும் உறவினர் மகள் மோகனப்பிரியா ஆகிய 3 பேரும் நடுரோட்டில் வலது புறமாக விழுந்தனர். அந்த சமயத்தில் நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற மற்றொரு லாரி அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் ரூரல் காவல் துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி (DSP) மற்றும் மல்லூர் போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். இதனால் அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் விபத்துக்கு காரணமான லாரியை ஓரமாக அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து சரியானது.

விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டதால் அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: