• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒரே நாடு ஒரே தேர்தல் அடிப்படையில் 2024ல் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் - எடப்பாடி பழனிசாமி

ஒரே நாடு ஒரே தேர்தல் அடிப்படையில் 2024ல் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் 2024ல் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

  • Share this:
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , பிரசாரம் இன்னும் திட்டமிடப்படவில்லை. 9 மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். கூட்டுறவு வங்கிகளில் அரசியல் கட்சி சார்பில் யாரும் போட்டியிடவில்லை. எந்த ஆட்சியாக இருந்தாலும் வங்கி முறைகேட்டில் நடவடிக்கை எடுப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அனைத்திலும் முறைகேடு நடைபெற்றதாக தெரியவில்லை என்றார்.

திமுக தேர்தல் அறிக்கை என்றைக்கும் நிறைவேற்றியதாக வரலாறு இல்லை. முதல் கையெழுத்து நீட் ரத்து செய்வேன் என்று கூறிய ஸ்டாலின் அதை செய்யவில்லை. நாங்கள் போட்ட தீர்மானத்தையே அவர்களும் சட்டசபையில் நிறைவேற்றியுள்ளனர் என்ற அவர், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற கோரிக்கையை நம்பி 43 லட்சம் பேர் காத்திருந்தனர் என்றார்.

2024-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் கட்டப்படுகிறது. எனவே எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.  ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் 8 பேர் மட்டுமே மருத்துவகல்வி பயின்ற நிலையில், 7.5 சத இட ஒதுக்கீடு அளித்த்தால் 435 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதே முறையை திமுக அரசும் பின்பற்றி இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

Also Read : கொரோனா தடுப்பூசி போட கூவி கூவி அழைக்கும் சுகாதார பணியாளர்கள் - வைரல் வீடியோ

அதிமுகவைச் சார்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது பற்றி செய்தியாளர்கள் கேட்தற்கு, திமுகவில் 13 பேர் மீது சொத்துகுவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதிமுகவை மட்டுமே ஊடகங்கள் பேசி வருகின்றன. ஆட்சியில் இருக்கும்போதும், இப்போதும் அதிமுகவை மட்டுமே குறிவைத்து செய்திகள் வெளியிடப்படுகின்றன. மக்கள் பிரச்சினையை எடுத்துச் சொன்னால் யாரும் வெளியிடுவதில்லை.

மேலும் சேகர் ரெட்டி டைரி குறிப்பில் 43 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக வெளியான தகவல்  ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும், இது தொடர்பாக எந்த அதிகாரிகளும் சொல்லவில்லை  தனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை என திட்டவட்டமாக மறுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: