சேலத்தில் அரசு உத்தரவை மீறி வீட்டு உபயோகப் பொருட்கள் கடையை திறக்க சொல்லி பொருட்கள் வாங்க மனைவியுடன் வந்த அதிமுக எம்எல்ஏ!

கடையை திறக்க சொல்லி மனைவியுடன் பொருள் வாங்க வந்த அதிமுக எம்எல்ஏ

அப்பொழுது அங்கு வந்த காவல் துறையினர் கடை திறந்து இருப்பதை கண்டு கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

  • Share this:
சேலத்தில் அரசு உத்தரவை மீறி வீட்டு உபயோகப் பொருட்கள் கடையை திறக்க சொல்லி பொருட்கள் வாங்க மனைவியுடன் வந்த அதிமுக எம்எல்ஏ-வால் சர்ச்சை எழுந்துள்ளது.

ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. தளர்வுகள் வழங்கப்பட்ட 27 மாவட்டங்களில் சில வணிக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஷார்ப்ட்ரானிக்ஸ் எனும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையை திறக்க சொல்லி சேலம் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி இருவரும் இன்று கடைக்குச் சென்று, வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்பொழுது அங்கு வந்த காவல் துறையினர் கடை திறந்து இருப்பதை கண்டு கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரின் மனைவி வெளியில் வந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு காரில் சட்டமன்ற உறுப்பினர் புறப்பட்டுச் சென்றார்.

Also read: டெல்லியில் தோனியை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், எம்.பி கதிர் ஆனந்த்!

அரசு உத்தரவை மீறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையை திறக்க சொன்ன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Esakki Raja
First published: