Home /News /tamil-nadu /

Edappadi Palaniswami | ஒவ்வொரு தேர்தலிலும் பாமக கூட்டணி மாறுவது வாடிக்கை - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

Edappadi Palaniswami | ஒவ்வொரு தேர்தலிலும் பாமக கூட்டணி மாறுவது வாடிக்கை - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அதிமுக இன்று நிமிர்ந்து நின்று மிகுந்த வளர்ச்சி அடைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் திமுகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் ரெய்டு நடக்கிறது என்றார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
பாமகவுக்கு நாங்கள் என்ன துரோகம் செய்தோம் என அவர்கள் தான் கூறவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் ஓமலூர் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வந்தார் . இங்கு நிர்வாகிகளை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, அரசியல் கால்புணர்ச்சியோடு தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுகிறது. தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் கழக அமைப்பு தேர்தல் நடக்கிறது. சிறப்பான முறையில் அமைதியாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக அரசு திட்டமிட்டு முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்துகிறது.

தேர்தல் அறிக்கைகள்  525 வாக்குறுதிகளை திமுக அறிவித்திருந்தது. அதில் சில வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. பல அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று உள்ளனர். இவற்றை மறைப்பதற்காக தற்போது வேண்டும் என்றே பொய் வழக்கு போடுகிறார்கள். லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் சோதனை செய்கிறார்கள்.

Also Read: கர்ப்பிணியை 6 கி.மீ டோலிகட்டி சுமந்து வந்த மக்கள் - உயிரை பணயம் வைக்கும் கர்ப்பிணிகள்

மாதம்தோறும் ரேஷன் கடை தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தனர . ஆனால் இன்னமும் பணம் வழங்கப்படவில்லை. கல்வி கடன் ரத்து என தெரிவித்தனர். ஆனால் ரத்து செய்யப்படவில்லை. நீட்தேர்வு ரத்து செய்வதாக தெரிவித்தனர் .அதுவும் ரத்து செய்யப்படவில்லை. டீசலுக்கு விலை குறைக்கப்படவில்லை பெட்ரோலுக்கு மட்டும் விலையை குறைத்து உள்ளனர். இதனால் விலைவாசி உயர்ந்து வருகிறது.

பாண்டிச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைந்து இருக்கிறது ஆனால் தமிழகத்தில் டீசலுக்கு இன்னும் விலை குறைக்கவில்லை. இவற்றை எல்லாம் மறைக்க இந்த ரெய்டு நடக்கிறது என்றார். மக்களை திசை திருப்ப இந்த ரெய்டு நடக்கிறது அதிமுகவினரை பழிவாங்கும் நோக்கத்தில் இந்த ரெய்டு நடக்கிறது என்று வன்மையாக கண்டிக்கிறோம்.அதிமுக இன்று நிமிர்ந்து நின்று மிகுந்த வளர்ச்சி அடைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் திமுகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் ரெய்டு நடக்கிறது என்றார்.

Also Read: மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி மாணவி.. அதிர்ச்சியில் பிறந்த குழந்தை - நடந்தது என்ன?

இன்று எல்லாத் துறையிலும் லஞ்சம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 7 மாத காலத்தில் 6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளனர். நல்ல நிர்வாகம் கிடையாது. முதலமைச்சர்  செல்கிறார் வருகிறார். வேறு என்ன செய்தார். வடகிழக்கு பருவமழை துவங்கும் என நன்றாகத் தெரியும் ஆனால் திட்டமிட்டு தூர்வார வில்லை. தூர்வாரி இருந்தால் மழை நீர் தேங்கி இருக்காது. இதை செய்ய தவறிய அரசு திமுக அரசு. ஒரே நேரத்தில் சென்னை மாநகரில் பணியாற்றிய 160 பொறியாளர்களை மாற்றினார்கள் அனுபவமில்லாத பொறியாளர்களை நியமித்தனர். இதுவும் மழைநீர் தேங்கியதற்கு ஒரு காரணம். குளறுபடியான ஆட்சி திமுக என்றார்.

அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டங்களை தான் தற்போது முதலமைச்சர் திறந்து வைக்கிறார். நாங்கள் போட்ட திட்டத்திற்கு தான் அடிக்கல் நாட்டி வருகிறார். விவசாயி கடன்களை முழுமையாக இன்னும் ரத்து செய்யவில்லை. கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்கள் இன்னும் ரத்து செய்யப்படவில்லை .கேட்டால் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவிக்கிறார்கள்.
அதிமுக அரசு கொண்டு வந்த அற்புதமான திட்டங்களை திமுக அரசு முடக்க பார்க்கிறது என்றும் தெரிவித்தார்.

Also Read :  முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் அதிரடி சோதனை - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனைக்கு காரணம் என்ன?

பாமகவிற்கு  கூட்டணியில் துரோகம் செய்துவிட்டதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு,  நாங்கள் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி வருகிறார்கள் என்ன துரோகம் செய்தனர் என அவர்கள் தான் கூற வேண்டும்,  மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்றார்.

பாமகவினர் திமுகவிற்கு ஆதரவாக பேசி வருகிறார்களே என்று கேட்டதற்கு, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது. எனவே அவர்கள் தற்போது கூட்டணியில் இல்லை என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். ஒவ்வொரு தேர்தலின்போதும் பாமக கூட்டணி நிலைப்பாடு மாறுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அது அவர்களது வாடிக்கை என்று கூறி  பேட்டியை முடித்துக்கொண்டார்.
Published by:Ramprasath H
First published:

Tags: ADMK, DVAC, Edappadi palanisamy, PMK

அடுத்த செய்தி