தி.மு.கவின் கைப்பாவையாக மாறினால், அதற்கான பலனை எதிர்காலத்தில் அனுபவிப்பீர்கள் என காவல் துறைக்கு, எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் ,எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் வாழப்பாடி , பேளூர் பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இன்று காலை வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால்தான் குடிநீர் வசதி ,சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரமுடியும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.
Also Read : குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 என்னாச்சு.. உதயநிதியை நோக்கி பாய்ந்த கேள்வி
எனக்கு முதலமைச்சர் பொறுப்பு கிடைத்தது. பொதுமக்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை செய்து கொடுத்தோம். ஆனால் ஸ்டாலின் சொந்த வேலை செய்து வருகிறார். தற்போது விளம்பர ஆட்சித் தான் நடக்கிறது. 9 மாத ஆட்சியில் எந்த பயனும் கிடைக்க வில்லை. 2500 ரூபாயுடன் பொங்கல் பரிசு கொடுத்தோம். அருமையாக பொங்கல் கொண்டாடினர். ஆனால் திமுகவினர் 21 பொருட்கள் கொடுத்தனர். இந்த பொங்கல், தொகுப்பில் 15 பொருள்தான் இருந்தது.பைகளும் சரியாக கொடுக்க வில்லை . இதிலும் ஊழல் நடந்துள்ளது.
நீட் தேர்வு ரத்து செய்வதாக தெரிவித்தனர். இப்போது ரத்தா செய்தார்களா? எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு. ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு நீட் தேர்வு வர காரணம் காங்கிரசும் அவர்களுடன் கூட்டணியில் இருந்தது திமுக வும் தான்.ப லர் இறந்து விட்டதாக கூறி உள்ளனர். இதற்கு காரணம் காங்கிரசும், திமுகவும் தான். திமுக இரட்டை வேடம் போடுகிறது.
யாரும் கோரிக்கை வைக்காத நிலையில் ஏழை குழந்தைகள் மருத்துவராக 7.5 சத இடஒதுக்கீடு செய்து கொடுத்தோம்.
கல்வி கட்டணமும் அரசே கட்டும் என அறிவித்தோம். இது எவ்வளவு பெரிய திட்டம். இன்று 541 குழந்தைகள் மருத்துவ படிப்பில் சேர்ந்து உள்ளனர் என்றார்.
Also Read: குண்டு வீச்சு சம்பவத்தை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் - அண்ணாமலை
உயிரோட்டமுள்ள திட்டங்களை செயல்படுத்தினோம்.
பல திட்டங்களை நிறைவேற்றினோம் என்ற அவர், 9 மாதம் ஒன்றமே திமுக ஆட்சியில செய்யவில்லை. இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினர். ஆனால் இதுவரை தரவில்லை. கல்வி கடன் ரத்து என்றனர். ஆனால் இதுவும் ரத்தாக வில்லை என்றும் தெரிவித்தார்.வரும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முயலுகிறார்கள். ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்துங்கள். நாங்கள் உண்மையான தேர்தலை நடத்தினோம். வேண்டும் என்றே விசம பிரசாரம் செய்து வருகின்றனர். திமுக சொல்லும் விசம பிரசாரத்தை நம்ப வேண்டாம். எந்த அதிகாரியும் முறைகேட்டில் ஈடுபட்டால் அதிகாரிகளுக்கு பதவி இருக்காது. மக்களை நம்பி அவர்கள் தேர்தலில் நிற்கவில்லை. யாரும் அச்சப்படாமல் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரியுங்கள் என்றும் தெரிவித்தார்.
Also Read: காசுக்காக பெட்ரோல் குண்டு வீசும் கருக்கா வினோத் - பின்னணியில் இருப்பது யார்?
தந்தையை போல் பத்து மடங்கு பொய் பேசுபவர் உதயநிதி ஸ்டாலின். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரிந்த நீங்கள், அதிமுகவை ஏன் அழைக்கிறீர்கள். பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசும், உதயநிதிக்கு டாக்டர் பட்டமும் கொடுக்கலாம். திமுக இனிவரும் 4 ஆண்டு கால ஆட்சியில் நாமத்தை மட்டுமே போடுவார்கள். மக்களுக்கு எந்த நன்மையும் செய்யமாட்டார்கள் என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, ஸ்காட்லாண்ட் காவல் துறைக்கு இணையாக விளங்கும் தமிழ்நாடு காவல்துறை, ஏவல் துறையாக மாறக் கூடாது.
காவல் துறை அதிகாரிகள், தி.மு.கவின் கைப்பாவையாக மாறினால், அதற்கான பலனை எதிர்காலத்தில் அனுபவிப்பீர்கள். கீழே இருக்கும் சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும் எனவும் காவல் துறைக்கு, எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார். உயர் பதவியில் இருப்பவர்கள் நாட்டை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். தில்லுமுள்ளு செய்து தேர்தலில் வெற்றி பெறலாம் எனக் கருதுகிறார்கள். ஆனால் அது நடக்காது. நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று இருக்கிறோம். தவறு செய்தால் அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு ஆளாக நேரிடும். வரும் தேர்தல் மிக முக்கிய தேர்தல். நாம் அறிவித்த திட்டங்களை தெரிவித்து வாக்குகளை சேகரிக்க வேண்டும்” என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.