எம்ஜிஆர்-க்கே அரசியல் ஆலோசனை வழங்கியதாக கூறிய சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜலகண்டாபுரத்தில் தூய்மைப் பணியாளர்கள் உள்பட முன்களப் பணியாளர்கள் 100 பேருக்கு தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கொரோனா நிவாரண உதவியாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.
Also Read: ஈபிஸ் - ஓபிஎஸ்-ஐ அரவணைத்து செல்ல விரும்புகிறேன்; சசிகலா
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் குற்றம் சாட்டி உள்ளது போல் கொரோனா தடுப்பூசிகள் வேண்டுமென்றே வீணடிக்கப்படவில்லை என்றும், ஆரம்ப காலகட்டத்தில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மருந்துகள் வீணாகின என்றும் விளக்கமளித்தார். கொரோனா மூன்றாம் அலை பரவும் சூழலில் தேவையான தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து தமிழக அரசு பெற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஏற்கனவே பலமுறை கூறியுள்ள நிலையில் அவர் வேண்டுமென்றே பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர்-க்கே அரசியல் ஆலோசனை வழங்கியதாக கூறிய சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை அழித்துவிட முடியாது என்றார். சசிகலா அதிமுகவிலிருந்த காலகட்டத்திலும் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
காவிரி நதிநீர் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என்றும் நதி நீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கர்நாடகம் இனி காவிரியின் குறுக்கே அணைகள் தடுப்பணைகள் கட்ட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.