salem | தனது சொந்த ஊரில் மருத்துவ சேவையாற்றி வரும் இளம் மருத்துவர்..

Youtube Video

சென்னையில் அரசுப் பொது மருத்துவமனையில் பணிபுரியும் இளம் மருத்துவர் சேமித்து வைத்த ஒரு மாத விடுப்பில் தான் பயின்ற கிராமத்துக்குச் சென்று கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

  • Share this:
    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவராக பணியாற்றி வருபவர் செல்வகுமார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட வேம்பனேரி என்ற கிராமத்தை சேர்ந்த அவர், ஜலகண்டாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். ஜலகண்டாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையும் அதனால் சிலர் உயிரிழந்ததையும் அறிந்த செல்வகுமார், தான் மருத்துவராவதற்கு வழிவகுத்த கிராமத்திற்குச் சென்று உதவ முடிவு செய்தார்.

    இதுவரை எடுக்காத விடுப்புகளை சேர்த்து, ஒரு மாத கால விடுப்பு எடுத்து கிராமத்திற்கு மருத்துவ சேவை ஆற்ற வந்துள்ளார். அங்கு நண்பர்கள் மற்றும் 104 மருத்துவ ஆம்புலன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா சிகிச்சை மையம் அமைத்து சிகிச்சை அளித்து வருகிறார்.

    மேலும் படிக்க...சித்த மருத்துவ சிகிச்சையின் சிறப்பம்சம் என்ன?

    சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றும் அனுபவத்தைக் கொண்டு கிராமப்பகுதிகளில் கொரோனா பரவுவதற்கு இரு முக்கிய காரணங்களைக் கண்டறிந்துள்ளதாகவும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர் செல்வகுமார் கூறுகிறார்.



    தான் பயின்ற அரசுப் பள்ளி அமைந்துள்ள கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஒவ்வொவரையும் பாதுகாக்க வேண்டும் என்ற முடிவோடு, ஒரு மாதம் விடுப்பு எடுத்து, சென்னையிலிருந்து சென்று சேவை ஆற்றும் மருத்துவர் செல்வகுமாரை அனைவரும் பாராட்டுகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: