நள்ளிரவில் இளைஞர்களை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல் - சேலத்தில் நடந்த பயங்கரம்

சேலம் முன்விரோதம்

சேலத்தில் நள்ளிரவில் இளைஞர்களை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share this:
    சேலத்தில்  முன் விரோதம் காரணமாக வாலிபர்கள் சிலரை   ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி  சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் நள்ளிரவில் பரபரப்பு.

    சேலம் மாநகர் கிச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  எஸ்.எம்.சி காலனியைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்லதுரை கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி  முன்விரோதம் காரணமாக சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலரின் கணவர் பழனிச்சாமி உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில்  நேற்று இரவு 9 மணியளவில்  ஐந்துக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்த பதினைந்து பேர் கிச்சிப்பாளையம், பாரதி நகர், ஹவுசிங் போர்டு பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்த செல்லதுரையின் ஆதரவாளர்கள் சிலரை  ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கினர். இதில் கத்திக்குத்து பட்ட நான்கு பேர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Also Read:  தடம் மாறிப்போன காதல் மனைவி.. திருப்பி அனுப்ப மறுத்த டீக்கடை மாஸ்டர் - ஆத்திரத்தில் கொலை செய்த கணவன்

    இந்நிலையில் பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டதால்,  கொலைவெறி தாக்குதல் நடத்திய 15 பேரும், கத்தி, வீச்சரிவாளை  போட்டுவிட்டு  அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து சாலையில்  ரத்தவெள்ளத்தில் கிடந்த செல்லதுரையின் ஆதரவாளர்களான மணி, பிரதாப் ,வினோத் மற்றும் 17 வயது சிறுவன் உதயா ஆகிய 4 பேரையும் அப்பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  இதில் 2 பேர் உயிருக்கு போராடி வரும் நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த நிலையில் கிச்சிப்பாளையம் போலீசார், கத்தி மற்றும் வீச்சரிவாளை கைப்பற்றி  வழக்கு பதிவு செய்து, நள்ளிரவில்  கொலைவெறி தாக்குதல் நடத்திய 15-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.  முன்விரோதம் காரணமாக ரவுடி  செல்லதுரையின் ஆதரவாளர்களையும்  கொலை செய்யும் நோக்கில்  அதிமுக கவுன்சிலரின் கணவர் பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தான்  நள்ளிரவில் ஓட ஓட விரட்டி கத்தி மற்றும் வீச்சரிவாளால் வெட்டியதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

    Also Read: வடசென்னையை கலக்கிய செயின் பறிப்பு கொள்ளையன் கைது

    தொடர்ந்து கிச்சிபாளையம் பகுதியில் தாக்குதல் நடத்திய கும்பல் யார். எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் வாலிபர்களை ஓட ஓட வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: திருமலை தமிழ்மணி



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: