Home /News /tamil-nadu /

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர் 8 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர் 8 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு

மிரட்டல் விடுத்த நபர் 8 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு

மிரட்டல் விடுத்த நபர் 8 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு

Salem News | சேலம் அருகே 120 அடி உயர டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு...   8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்...

  • News18
  • Last Updated :
    சேலம் அருகே 120 அடி உயர டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரை 8 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

    சேலம் பெரியபுத்தூர் கனவாகாடு பகுதியில் சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் புத்தூர் ஊராட்சி கிராம மக்களின் பயன்பாட்டிற்காக ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்கு வருவாய் துறை அதிகாரிகள் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நேற்றைய தினம் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சகாதேவன் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    இதைத்தொடர்ந்து வீட்டின் அருகே உள்ள 120 அடி உயரம் உள்ள செல்போன் டவர் மீது ஏறிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அரசு அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்படாமல், டவர் மீது இருந்து இறங்காமல் தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்து வந்தார்.

    தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் நடத்தப்படும், அதுவரைக்கும் குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பணிகளை நிறுத்துவதாக அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு தற்கொலை முயற்சியை கைவிட்டு இறங்கினார்.

    Also read... Kushboo | திமுக அரசின் ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது.. பாஜக பாடம் புகட்டும் - குஷ்பு

    8 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் பத்திரமாக சகாதேவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சகாதேவன் இந்த பிரச்சினையில் ஏற்கனவே ஒரு முறை டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

    -செய்தியாளர்: திருமலை.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Salem

    அடுத்த செய்தி