முகப்பு /செய்தி /தமிழ்நாடு / டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கு: 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது

டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கு: 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது

ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசரை தாக்கி 6,11,000 ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசரை தாக்கி 6,11,000 ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசரை தாக்கி 6,11,000 ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Last Updated :

சேலம்  மாவட்டம்  ஆத்தூர்  அருகே  ஏத்தாப்பூர்  பேரூராட்சியில்  அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த  கடையின் சூப்பர்வைசராக கொத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்த  மோகன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி இரவு 10 மணியளவில்  டாஸ்மாக் கடையை மூடிவிட்டு மதுபானங்கள் விற்பனையான  பணம்  6 இலட்சத்து 11 ஆயிரம்  ரூபாயை எடுத்துக்  கொண்டு கொத்தாம்பாடியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து  டூவீலரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரது டூவீலர்  மீது  மோதியுள்ளளனர். இதில் நிலைதடுமாறிய மோகன் கீழே  விழுந்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் மோகனை  சராமாரியாக தாக்கி விட்டு அவரிடம் இருந்த பணப்பையை பறித்து  கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து மோகன் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு தனிப்படைகளை அமைத்து மர்ம கும்பலை தேடி வந்தனர், இதனிடையே அந்த கும்பல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருப்பூர் போலீசார் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் [எ] கார்த்திக், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் [எ] குமார் ஆகிய இரண்டு பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர், இதனையடுத்து ஏத்தாப்பூர் போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சிறையில் இருந்த செந்தில்குமார், குமரேசன், திருநெல்வேலியை சேர்ந்த ராஜதுரை ஆகிய மூன்று பேரும் திட்டம் தீட்டி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் சென்ற மோகனிடம் இருந்து ஆறு இலட்சத்து 11 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பியோடியதும் தெரிய வந்தது.

top videos

    இதனையடுத்து செந்தில்குமார், குமரேசன் ஆகியோர் அளித்த தகவலின் பேரில் திருநெல்வேலியை சேர்ந்த ராஜதுரை மற்றும் காவலில் எடுத்து வந்த செந்தில்குமார், குமரேசன், ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    First published:

    Tags: Salem, Tasmac