Home /News /tamil-nadu /

மருமகளிடம் அத்துமீறிய மாமனார் - அடங்காத தந்தையை அடித்துக்கொன்ற மகன்

மருமகளிடம் அத்துமீறிய மாமனார் - அடங்காத தந்தையை அடித்துக்கொன்ற மகன்

சேலம் கொலை

சேலம் கொலை

Salem News | சேலத்தில் மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே விருதாசம்பட்டி கருப்புகவுண்டன்காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு வீரமணி (28), நரசிம்மன் (25) ஆகிய இரு மகன்கள். ராஜேந்திரன் குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எளையம்பாளையத்தில் வசித்து வந்தார். அங்கு தறிக்கூடத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனிடையே இரண்டு ஆண்டுக்கு முன்பு விருதாசம்பட்டியை சேர்ந்த பெண்ணை வீரமணிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், மாமனார் ராஜேந்திரன், அடிக்கடி மருமகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தனது கணவரிடம் அவர் தெரிவித்துள்ளார். உடனே இருவரும் பெற்றோரை விட்டு பிரிந்து, விருதாசம்பட்டி கருப்புகவுண்டன் காட்டுவளவிற்கு தனிக்குடித்தனம் வந்துள்ளனர்.

அங்கும் அவ்வப்போது வந்து மருமகளிடம் மாமனார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு, கணவர் வீரமணியிடம் கோபித்துக் கொண்டு அவரது மனைவி, அவரின் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

Also Read: திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளையில் திடீர் ட்விஸ்ட்.. நாடகமாடிய ஊழியர் டிக்காராம் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன், தனது மகன் வீரமணியின் வீட்டிற்கு வந்துள்ளார். மதுபோதையில் இருந்த அவர், மகன் மற்றும் மருமகளை பற்றி தவறாக பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வீரமணி, தந்தையை கண்டித்துள்ளார். அப்போதும் கேட்காததால், அங்கிருந்த கல்லை எடுத்து தந்தையின் கால்களில் போட்டுள்ளார். பிறகு முகத்தில் கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து வந்த நங்கவள்ளி போலீசார், ராஜேந்திரன் உடலை உடற்கூறாய்விற்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,  வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரின் விசாரணையில், தனது தந்தை ராஜேந்திரன் எனது மனைவியிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தப்பாக நடக்க முயற்சித்தார். இது சம்பந்தமாக கடந்த மூன்று மாதங்களாக பிரச்சனை இருந்து வருகிறது.  02-ம்  தேதி இரவு சுமார் 7 மணி அளவில் எனது அப்பா எனது வீட்டிற்கு வந்து என் மனைவியையும் எனது அம்மா லட்சுமியையும் தவறான வார்த்தைகள் சொல்லி ஆபாசமாக  பேசினார்.  இதுபோன்ற தவறான வார்த்தைகளை  பேசாதீர்கள் என்று கூறியதால்இரவு சுமார் 10 மணி அளவில் இருவருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

Also Read:  பணத்துக்காக பெண் மருத்துவர் செய்த காரியம் - ஆக்‌ஷனில் இறங்கிய ஆட்சியர்

எனது தந்தை ராஜேந்திரன் என்னை கொடுவாளால் வெட்ட முயற்சித்தபோது அவரை தடுத்து தள்ளி விட்டேன். எனது தந்தை என் உயிர் நாடியை பிடித்து இழுத்தபோது இதுக்கு மேல் விட்டால் என்னை கொன்றுவிடுவார் என கருதி,  வீட்டு முன்பு படியில் இருந்த ஹாலோ பிளாக் கல்லெடுத்து அவரின் இரண்டு கால்கள் மீது போட்டு  உடைத்துவிட்டேன். பின்பு அவரது மூஞ்சியில் கட்டையைக் கொண்டு அடித்து விட்டதாகவும் வீரமணி தெரிவித்துள்ளார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Death, Murder, Salem, Sexual abuse, Sexual harassment

அடுத்த செய்தி