முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொலை - இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு

16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொலை - இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு

சிறுமி கொலை

சிறுமி கொலை

தம்மம்பட்டியில்  சிறுமியை காதல்வலையில் வீழ்த்தி திருமணம் செய்துக்கொண்டு குடும்பம் நடத்தி வந்த காதல் கணவனே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :

தம்மம்பட்டி  அருகே  16 வயது காதல்  மனைவியை  கொலை செய்து  விட்டு  தலைமறைவான காதல் கணவனை  போலீசார் தேடிவருகின்றனர்.

சேலம்  மாவட்டம்  தம்மம்பட்டி  அருகே  செந்தாரப்பட்டி  அங்கமுத்து மூப்பனார்  தெருவைச்  சேர்ந்தவர்  மணிகண்டன் (வயது 27). பால்காரரான இவர்  ஓர் ஆண்டுக்கு  முன்பு ராசிபுரத்தை  சேர்ந்த  செல்வம்  என்பவரது மகள் 16வயது சிறுமியை செந்தாரப்பட்டியில்  உள்ள உறவினர்  வீட்டு  விசேஷத்திற்கு  வந்தபோது   காதல் வலையில் வீழ்த்தி  மணிகண்டன்  பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்  செய்துக்கொண்டார்.

Also Read: ஃபேஸ்புக் நண்பனால் வந்த வில்லங்கம்.. ஷாக்கான பெண் - போலீஸ் விசாரணையில் அம்பலம்

இருவரும் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் நேற்று  அதிகாலை  காதல் மனைவியுடன்  ஏற்பட்ட  தகராறில்  மணிகண்டன் சிறுமியை  அடித்து  கொலை  செய்து விட்டு  அவரது உறவினர்களிடம் தெரிவித்து விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த தகவலையறிந்த சிறுமியின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது கழுத்தில் காயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.

Also Read: திருநங்கையாக மாறிய மகனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர் - விருத்தாசலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

top videos

    இதனையடுத்து அவரது உறவினர்கள் தம்மம்பட்டி  காவல்  நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை  மீட்டு  பிரேதபரிசோதனைக்காக  சேலம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி  வைத்தனர்.இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார்  செய்து  தப்பியோடிய  மணிகண்டனை தேடி வருகின்றனர். இதனிடையே 16 வயது சிறுமியை காதல்  வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்த காதல் கணவனே அடித்துக்  கொன்ற  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை   ஏற்படுத்தி  உள்ளது.

    First published:

    Tags: Crime News, Death, Husband Wife, Love marriage, Police, Salem