தாத்தா,பாட்டியின் கண்டிப்பு - பேரனின் ஆத்திரத்தால் பறிப்போன உயிர்கள்

முதியவர்கள் மரணம்

கண்டித்த ஆத்திரத்தில் தாத்தா, பாட்டியின் வீட்டை தீயிட்டு கொளுத்திய பேரன் கைது.

  • Share this:
ஆத்தூர் அருகே பேரனை கண்டித்த ஆத்திரத்தில் தாத்தா, பாட்டி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் வெளிப்புற கதவை பூட்டி தீவைத்து எரித்து கொலை.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி கிராமம் பாரதியார் நகரில் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் காட்டுராஜா இவரது மனைவி காசியம்மாள் (வயது 70) இவர்களுக்கு தேசிங்குராஜா, குமார், மணி ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதனிடையே மூன்றாவது மகன் குமார் என்பவரின் 16 வயது மகனிடம் திமுக கட்சி பிரமுகராக உள்ள பெரியப்பா தேசிங்குராஜாவுடன், பேரன் ரிஷ்வந்தனை அடிக்கடி ஒப்பிட்டு பேசி, தாத்தா, பாட்டி இருவரும் கண்டித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரமடைந்த ரஷ்வந்த்குமார் நேற்றிரவு 2:30 மணியளவில் தாத்தா, பாட்டி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் வெளிப்புற கதவை பூட்டி விட்டு குடிசை வீட்டிற்கு தீவைத்துள்ளார், மலமலவென எரிந்த தீயில் வயதான தம்பதி இருவரும் உடல் கருகி பலியானார்கள்.

Also Read:  மதுபோதையில் மகனை அடித்துக்கொன்று நாடகமாடிய தந்தை - பொள்ளாச்சியில் நடந்த பயங்கரம்

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஆத்தூர் ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயில் கருகி பலியான வயதான தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் 16 வயது சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் விசாரணை மேற்கொண்டு வருகிறார், பேரனை கண்டித்த ஆத்திரத்தில் தாத்தா, பாட்டியை தீவைத்து எரித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Ramprasath H
First published: