ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1500 கிலோ ஆவின் ஸ்வீட் பார்சல்.. ஆதாரம் இருக்கு - அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு

ஆவின் முறைகேடு

கடந்த ஆட்சியின் போது ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக பட்டியலிட்டார்.

  • Share this:
    ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

    சேலம் ஆவின் பால் பண்ணையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். பால் பண்ணை வளாகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி பிரிவு, கிடங்குகள் ஆகியவற்றை நேரில் சென்று சென்று பார்வையிட்டார். முன்னதாக, சேலம் மாநகர பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆவின் விற்பனை நிலையங்களை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    Also Read: நடிகை கொடுத்த பாலியல் புகார்.. சென்னை டூ மதுரை.. மாஜி அமைச்சர் மணிகண்டனிடம் தொடரும் விசாரணை

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், கடந்த ஆட்சியின் போது ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக பட்டியலிட்டார்.குறிப்பாக 234 பேர்  முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும்இதுகுறித்து விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    மேலும், 634 முதுநிலை மற்றும் இளநிலை  ஆலை பணியாளர்களை நியமிக்க  முறைகேடாக பணம் பெற்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அந்தப் பணியிடங்களுக்கு புதிதாக பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும்  விற்பனை1.50 லட்சம் அதிகரித்துள்ளதாகவும், சென்னையில் 22 நிலையங்கள்  உள்பட விலைகுறைப்புக்கு பின்பும் பழைய விலைக்கே பால் விற்பனை செய்த நிலையங்களுக்கு சீல் வைக்கப்ப்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பால் விலை குறைப்பால் அரசுக்கும் 270 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர்,தமிழகத்தில் 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது ; இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று கூறிய அமைச்சர் நாசர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரம் உள்ளது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    செய்தியாளர் - திருமலை தமிழ்மணி



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: