Home /News /tamil-nadu /

கடிதம் எழுதிவைத்து பள்ளி மாணவி தற்கொலை - பெற்றோர் அதிர்ச்சி

கடிதம் எழுதிவைத்து பள்ளி மாணவி தற்கொலை - பெற்றோர் அதிர்ச்சி

பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தற்கொலை

Attur Girl Suicide: என்னுடைய சாவிற்கு யாரும் காரணமில்லை பள்ளி மாணவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை

    ஆத்தூர்  அருகே  அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி  வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    சேலம்  மாவட்டம்  ஆத்தூர்  அருகே  உள்ள  நரசிங்கபுரம்  நகராட்சிக்கு  உட்பட்ட பாம்பாட்டி  நாயக்கர் தெரு பகுதியில்  வசித்து வருபவர் அரசு  பேருந்து ஓட்டுனரான  மகேஸ்வரன். இவருக்கு திருமணமாகி  சுகன்யா  என்கிற  மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில்  அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில் பத்தாம்  வகுப்பு  படித்து  வந்த இவரது மகள் நேற்று  காலை பள்ளிக்கு சென்று  விட்டு  மாலை வீடு  திரும்பினார். பின்னர்  மாணவி  வீட்டினுள் இருந்த அறைக்குள் பள்ளிச் சீறுடையை மாற்ற சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாணவி வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    Also Read: இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோக்களை பதிவேற்றிய பெண்.. நண்பர்கள் மூலம் தெரியவந்த அதிர்ச்சித் தகவல்..

    இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மகளை மீட்டு, ஆத்தூர்  நகர  காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர், இதனையடுத்து சம்பவ  இடத்திற்கு  வந்த  போலீசார்  தற்கொலை செய்து கொண்ட மாணவியின்   உடலை  மீட்டு பிரேத  பரிசோதனைக்காக  ஆத்தூர் அரசு  தலைமை  மருத்துவமனைக்கு  அனுப்பி  வைத்து  விசாரனை மேற்கொண்டனர்.

    விசாரணையில்  அரசு பேருந்தின் ஓட்டுனர் மகேஸ்வரன் தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் காலனி பகுதியை சேர்ந்தவர் என்பதும் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் தனது குடும்பத்துடன் பணிச்சுமை மற்றும் தனது பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்று வருவதற்கான வசதிகளுக்கு ஏதுவாக ஆத்தூர் அரசு பேருந்து பணிமனை அருகே உள்ள ஹவுசிங்போர்டு பகுதிக்கு குடிபெயர்ந்து வசித்து வந்துள்ளார்.

    Also Read: மாயமான பிளஸ் டூ மாணவி ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு -திண்டுக்கல்லில் அதிர்ச்சி

    இதனிடையே அவர்கள் வசித்து வந்த பகுதியில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறை காரணமாக நரசிங்கபுரம் 5வது வார்டு பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவருடைய வீட்டிற்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் குடிபெயர்ந்துள்ளனர்.  இவரது மகள்  அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்துள்ளார்.  சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர் உடையை மாற்ற வீட்டின் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுள்ளார். நீண்ட நேரமாகியும்  மகள் கதவை திறக்காததால் பெற்றோர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மாணவி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளர். ஒரு துண்டு சீட்டில் தன்  சாவிற்கு  யாரும் காரணமில்லை,  யாரையும்  துன்புறுத்த  வேண்டாம்  என்று  கடிதம் எழுத வைத்து  தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதனையடுத்து மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை  கைப்பற்றிய  போலீசார்  மாணவி படித்த அரசு பள்ளியில் ஆசிரியர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை மாணவி பள்ளிக்கு செல்லும் போது ஈவ்டிசிங் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதாவது காரணம் உள்ளதா ? தற்கொலைக்கு தூண்டியது யார்? என பல்வேறு கோணங்களில் மாணவியின்  பெற்றோரிடம்  விசாரணை  மேற்கொண்டு  வருகின்றனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Commit suicide, Crime News, Salem, School student, Tamilnadu

    அடுத்த செய்தி