Home /News /tamil-nadu /

ஆயுதபூஜைக்கான அழகு தோரணங்கள் விற்பனை தொடக்கம்; விலையேற்றத்தால் விற்பனை மந்தம்

ஆயுதபூஜைக்கான அழகு தோரணங்கள் விற்பனை தொடக்கம்; விலையேற்றத்தால் விற்பனை மந்தம்

ஆயுதபூஜைக்கான அழகு தோரணங்கள் விற்பனை தொடக்கம்

ஆயுதபூஜைக்கான அழகு தோரணங்கள் விற்பனை தொடக்கம்

ஆயுதபூஜைக்கான அழகு தோரணங்கள் விற்பனை தொடங்கியுள்ள நிலையில், பொருட்களின் விலையேற்றம் காரணமாக விற்பனை மந்தமாகியுள்ளது.

ஆயுதபூஜைக்கு வழக்கமாக மக்கள் தம் வீட்டிலுள்ள ஆயுதங்கள், வாகனங்கள், தொழில் செய்யும் சாதனங்கள் என அனைத்தையும் நன்கு கழுவி, சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் இட்டு, பூ வைத்து வழிபடுவது வழக்கம். அப்போது கூடுதலாக அழகுப்படுத்த காகித மாலைகள், பிளாஸ்டிக் தோரணங்களை வைத்தும், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் தோரணங்கள் கட்டி அழகுப்படுத்துவதும் வழக்கம்.

அதன்படி, சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் ஆயுத பூஜைக்கான பிளாஸ்டிக், காகித தோரணங்கள், பூக்கள் போன்றவற்றின் விற்பனை தொடங்கிவிட்டன. வரும் 26ம் தேதி ஆயுதபூஜை வரும் நிலையில், இப்போதே மக்கள் அழகு தோரணங்களை வாங்கி வைக்கத் தொடங்கிவிட்டனர்.

Also read: தேவர் ஜெயந்தி: மதுரையிலுள்ள வங்கியிலிருந்து தங்க கவசத்தை பெற்றுக்கொண்டார் ஓ.பி.எஸ்



நுழைவாயில் தோரணங்கள் (பெரியது) ரூ.500, சிறியது ரூ.220, நடுத்தரமானது ரூ.150, வெங்கடாசலபதி மாலை ரூ.150, நுழைவாயிலில் ஆயுதபூஜை என்ற எழுத்துகள் உள்ள தோரணம் ரூ.35, வெல்கம் என்ற எழுத்துத்தோரணம் ரூ.35, இருசக்கரவாகனங்களுக்கு வைக்கப்படும் கலர் கலரான குஞ்சம் ரூ.20, நான்கு சக்கரவாகனங்களுக்கு வைக்கப்படும் குஞ்சம் ரூ.100 ஆகிய விலைகளில் அழகுத்தோரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டை விட இந்தாண்டு கனிசமான விலையேற்றம் அடைந்துள்ளதாலும் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் அழகு தோரணங்களை வாங்க அதிக அளவில் முன்வராததாலும் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published by:Rizwan
First published:

Tags: Ayudha poojai

அடுத்த செய்தி