சேலத்தில் அரைநிர்வாணமாக மீட்கப்பட்ட காதல்ஜோடியின் சடலம்! அதிர்ச்சி பின்னணி...

காதல் ஜோடி அரை குறை ஆடையுடன் கிடந்ததாலும் அவர்கள் தற்கொலை செய்வதற்கு முன்பு உல்லாசமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Web Desk | news18-tamil
Updated: October 9, 2019, 11:00 PM IST
சேலத்தில் அரைநிர்வாணமாக மீட்கப்பட்ட காதல்ஜோடியின் சடலம்! அதிர்ச்சி பின்னணி...
Web Desk | news18-tamil
Updated: October 9, 2019, 11:00 PM IST
சேலத்தில்  அரை நிர்வாணமாக கிடந்த இளம் காதல் ஜோடியின்  உடலை மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளிப்பட்டறை அதிபர் கோபி. 22 வயதான இவரது மகன் சுரேஷ் தந்தையுடன் சேர்ந்து வெள்ளி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டைவிட்டு வெளியில் சென்ற சுரேஷ் இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

நள்ளிரவு 12 மணி அளவில், சுரேஷ் நடத்தி வரும் கார் செட்டிற்கு சென்று நண்பர்கள் பார்த்தனர். அப்போது கார் செட்டின் முன் பகுதியில் சுரேஷின் இருசக்கர வாகனம் நின்றது. அதனால் உள்ளே சென்று தேடிப்பார்த்தபோது, கார் ஒன்றின் பின் இருக்கையில், ஒரு இளம்பெண்ணும், சுரேசும் அரை நிர்வாணமாக இறந்த நிலையில் கிடந்தனர். உடனடியாக போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.


விசாரணையில் சுரேசுடன் பிணமாக கிடந்தது சேலம் குகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மூன்றாமாண்டு பொறியியல் படிக்கும் 20 வயதான ஜோதிகா என்பது தெரிய வந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளிப் பட்டறை அதிபரான சுரேஷ் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர். ஜோதிகாவின் தந்தையும் வெள்ளி தொழில் மற்றும் துணி வியாபாரமும் செய்து வருகிறார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ், ஜோதிகாவுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. அதனை அறிந்த ஜோதிகாவின் பெற்றோர் இருவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது. அதையும் மீறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

தொடர்ந்து ஜோதிகா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதும், இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சம் இருவரிடமும் இருந்துள்ளது. இதனால் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Loading...

காருக்குள் பெட்ஷீட் விரித்த நிலையில் கிடந்ததாலும், காதல் ஜோடி அரை குறை ஆடையுடன் கிடந்ததாலும் அவர்கள் தற்கொலை செய்வதற்கு முன்பு உல்லாசமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர் வெள்ளிப்பட்டறையில் உள்ள சயனைடை தின்று தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காருக்குள் பாதி சாப்பிட்ட நிலையில் சாக்லேட் சிதறி கிடந்ததால் அதற்குள் வைத்து சயனைடு சாப்பிட்டிருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த, ஒரே சமூகத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலம் பகுதியில் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Watch

First published: October 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...