சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை 2025-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயம்

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை உட்பட நாடு முழுவதும் 23 சாலை திட்டப் பணிகளை வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை 2025-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயம்
கோப்பு படம்
  • Share this:
இந்தியாவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் முக்கிய நகரங்களை இணைப்பதற்காக 7 ஆயிரத்து 800 கிலோ மீட்டர் தொலைவுக்கு விரைவு சாலைகள் மற்றும் பொருளாதார வழித்தட சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, சென்னை, சேலம் எட்டு வழிச்சாலை திட்டம், டெல்லி - மும்பை விரைவு சாலை திட்டம் உட்பட புதிதாக 23 சாலை திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் புதிய சாலை திட்டப் பணிகள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட நிலை அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில், 3 புள்ளி 3 லட்சம் கோடி மதிப்பில் நிறைவேற்றப்படும் இந்த சாலை திட்டங்களை அடுத்த 5 ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லி - மும்பை, அமிர்தசரஸ்-ஜாம்நகர் உட்பட நான்கு விரைவு சாலை திட்டங்களை வரும் 2023ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


பெங்களூர்- சென்னை, பெங்களூரு சேட்லைட் ரவுன் ரிங் ரோடு உள்ளிட்ட 9 சாலை திட்டப் பணிகள் 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திலும், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை உள்ளிட்ட 9 பசுமை வழிச்சாலை திட்டப் பணிகள் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்க்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக டெல்லி - மும்பை விரைவு சாலைக்கு தேவையான நிதியை திரட்டுவதற்கு தனி அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. அந்த அமைப்பின் மூலம் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறப்படும், சாலைகள் அமைக்கப்படுவதற்கான செலவு தொகையை சுங்க கட்டணம் மூலம் ஈடுகட்டப்படும் என்றும் சுங்க கட்டண நிறுவனங்கள் 20 ஆண்டுகள் வரை கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading