சேலம் மாவட்டம் ராமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள், வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் வராமல் இருக்க பள்ளம் தோண்ட வனத்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதற்காக வனச்சரகர் அன்பழகன், 5 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், அதில் 3 லட்சம் ரூபாய் கொடுத்தாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் மீதிப் பணத்தை கேட்ட அவர், துப்பாக்கியை காட்டி விவசாயிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. 60 சதவீத பணி முடிந்த நிலையில் பணி செய்ய விடாமல் வனத்துறையினர் துப்பாக்கி காட்டி மிரட்டி பொய் வழக்கு பதிந்து சுட்டு விடுவதாக வனச்சரகர் மிரட்டி வருவதாக தமிழக முதல்வர் மற்றும் சேலம் மாவட்ட வன அலுவலருக்கு கடந்த 26ஆ ம் தேதி புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் விவசாயிகளிடம் விசாரணை நடத்தியதையடுத்து வனச்சரகர் அன்பழகனை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.