200 ரூபாய்க்கு பதிலாக வந்த 500 ரூபாய்...! ஏ.டி.எம் மையத்தை முற்றுகையிட்டு பணம் எடுத்த மக்கள்

200 ரூபாய்க்கு பதிலாக வந்த 500 ரூபாய்...! ஏ.டி.எம் மையத்தை முற்றுகையிட்டு பணம் எடுத்த மக்கள்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: November 8, 2019, 2:15 PM IST
  • Share this:
சேலம் மாவட்டத்தில் 200 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் வந்ததால் ஏ.டி.எம் இயந்திரத்தை முற்றுகையிட்டு பலர் பணம் எடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் காடையாம்பட்டி  அருகே உள்ள பண்ணப்பட்டி என்ற இடத்தில் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளையில்,  மூன்று ஏ.டி.எம் இயந்திரங்கள் உள்ளது.  இந்த பகுதி சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் 24 மணி நேரமும் ஏ.டி.எம்.மில் கூட்டம்  இருக்கும்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியில் இருந்து 200 ரூபாய் எடுக்க சென்றால் 500 ரூபாய் பணம் வந்துள்ளது , ஆனால், வங்கி கணக்கில் 200 ரூபாய் மட்டுமே குறைவதாக  தகவல் வந்ததை தொடர்ந்து  இளைஞர்கள் பலர் இந்த தகவலை அவரது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கூறி ஏ.டி.எம்மில் இருந்து 200 ரூபாய் என டைப் செய்து 500 ரூபாயை  எடுத்துள்ளனர்.


நள்ளிரவு வரை இது போன்று பணம் எடுத்த பிறகு இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து அங்கு வந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக ஏ.டி.எம் சென்டரை மூடினர்.

மேலும், இது  குறித்து  டெக்னீசியன்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பிரச்னையை சரி செய்தனர். இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், “பொதுத்துறை வங்கி ஏ.டி.எம் என்றாலும்   பணம் நிரப்பும் பணியை தனியாரிடம் விட்டுள்ளதாகவும்,  வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் 200 ரூபாய் நிரப்ப வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நிரப்பி இருக்கலாம்.  இதனால்  500 ரூபாய் வருவதற்கு வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.

இது வரை எவ்வளவு பணம் இது போன்று போனது என தெரியவில்லை. இதற்கான  நஷ்டங்களை பணம் நிரப்பும் தனியார் கம்பெனிகளே பொறுப்போற்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
First published: November 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்