பொது மக்களுக்கு தினமும் இலவசமாக முகக்கவசம் தைத்துத் தரும் மூதாட்டி

சேலத்தில் 81வயது மூதாட்டி ஒருவர், பொதுமக்களுக்கும், நோய்த்தடுப்பு பணியில் உள்ளவர்களுக்கும் இலவசமாக முகக்கவசம் தைத்து கொடுத்துவருகிறார்.

பொது மக்களுக்கு தினமும் இலவசமாக முகக்கவசம் தைத்துத் தரும் மூதாட்டி
மூதாட்டி சரோஜா.
  • Share this:
சேலம் அண்ணா நகரைச் சேர்ந்த மூதாட்டி சரோஜா, தினமும் 50 முகக்கவசங்கள் தயாரித்து பொதுமக்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் வழங்கி வருகிறார். இதுவரை 1,500க்கும் மேற்பட்ட முகக்கவசங்களைத் தைத்துக் கொடுத்துள்ளதாகவும், ஐந்தாயிரமாவது தைத்துக் கொடுத்து விட வேண்டுமென்பதே தன் விருப்பம் என்றும் கூறுகிறார் சரோஜா.

இலவசமாக முகக்கவசம் கொடுக்கலாம் என்று யோசனை சொன்ன மகன் நடராஜ், அதற்காக இலவசமாக துணி பெற முயற்சிப்பது, இலவசமாகக் கிடைக்காவிடில் தனது சொந்தப் பணத்தில் துணி வாங்கி வருவது, முகக்கவசம் தயாரான பின் அதனைப் பயனாளர்களுக்குச் சேர்ப்பது என உதவி வருகிறார். சரோஜாவின் முயற்சிக்கு அவரது ஒட்டுமொத்த குடும்பமும் உறுதுணையாக நிற்கிறது.

Also see: 

20 வயதில் சரோஜா கற்ற தையல், அவருக்கு இத்துணை நாட்கள் பக்க பலமாய் இருப்பதோடு. தற்போது அவரை சமூக சேவையிலும் ஈடுபடுத்தியுள்ளது.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading