கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் தற்கொலை... உறவினர்கள் போராட்டம்

கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் தற்கொலை... உறவினர்கள் போராட்டம்
மாதிரிப் படம்
  • Share this:
சேலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சேலம் அருகே ஒன்பதாம் பாலி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த அதே பகுதியை சேர்ந்த 10 பேர் ஒரு வாரத்திற்கு முன்பு கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.


இந்நிலையில் மாரியம்மாள்(40) என்பவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் கல்லூரி வளாகம் முன்பு முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பின்னர் காவல்துறையினர் முற்றுகையிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Also read... கொரோனாவை தொடர்ந்து சீனாவை அச்சுறுத்தும் பிளேக் நோய்

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனால் பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading