ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் 90 வயது மூதாட்டி...!

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் 90 வயது மூதாட்டி...!
கனகவல்லி
  • News18
  • Last Updated: December 17, 2019, 4:38 PM IST
  • Share this:
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் சேலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 90 வயது மூதாட்டி ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 90 வயது மூதாட்டி கனகவல்லி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

சேலம் உருக்காலையையொட்டி அமைந்துள்ள முருங்கப்பட்டி ஊராட்சியில் சுமார் 5,000 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 50 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பரம்பரை பரம்பரையாக ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகின்றனர்.


தற்போது போட்டியிடும் கனகவல்லியின் கணவர் அழகேசபூபதி தொடர்ந்து நான்கு முறை ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து அவரது மகன் பார்த்தசாரதி இரண்டு முறை ஊராட்சிமன்ற தலைவராக இருந்துள்ளார்.

2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஊராட்சிமன்ற தலைவராக இருந்த கனகவல்லி, மீண்டும் இந்த ஊராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் களமிறங்கியுள்ளார்.

கிராமத்திற்கு தேவையான மின்சாரம், சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளை தாங்கள் தீர்த்து வைப்பதால் தங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களை மக்கள் தொடர்ந்து வெற்றிபெற செய்து வருவதாக தெரிவித்த கனகவல்லி, இவ்வளவு ஆண்டுகள் தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவாராக இருந்தும், தங்களுக்கென்று பெரிதாக சொத்துக்கள் ஏதும் சேர்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.Also see...
First published: December 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading