உயிரோடு இருக்கும்போதே குளிர்பதன பெட்டிக்குள் 24 மணி நேரம் அடைத்து வைக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு...!
3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், முதியவர், இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளிர்பதன பெட்டிக்குள் வைக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார்.
- News18
- Last Updated: October 16, 2020, 4:37 PM IST
சேலத்தில் உயிரோடு இருக்கும்போதே, குளிர்பதன பெட்டிக்குள் வைக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கந்தம்பட்டியைச் சேர்ந்த சரவணன், தனது சகோதரர் இறந்துவிட்டதாக கூறி குளிர்பதன பெட்டியை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளார். வாடகை நேரம் முடிந்த சூழலில், பெட்டியை திரும்ப எடுப்பதற்காக, ஊழியர்கள் வந்துள்ளனர்.
அப்போது, குளிர்பதன பெட்டியில் முதியவர் உயிரோடு கிடத்தப்பட்டு இருந்ததும், அவரது கை கால்கள் கட்டப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
முதியவர் பாலசுப்பிரமணிய குமாரை குளிர்பதன பெட்டியில் வைத்து, அவர் சாவதற்காக விடிய விடிய காத்திருந்ததை கேட்டு அதிர்ந்த அவர்கள், அக்கம் பக்கத்து மக்கள் உதவியுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Also read... காதல் மனைவியை குத்திக்கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.. நடந்தது என்ன? (வீடியோ)3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், முதியவர், இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.