ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரேஷன் கடையில் தக்காளி விற்பனை... அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன குட் நியூஸ்

ரேஷன் கடையில் தக்காளி விற்பனை... அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன குட் நியூஸ்

தக்காளி

தக்காளி

தேவையின் அடிப்படையில் நியாய விலைக்கடைகளிலும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம், அதனை விற்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பெய்து வருவதால், தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி 90 முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் கூறியுள்ளார். இதனை கட்டுப்படுத்த பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம், வியாழனன்று 4 மெட்ரிக் டன் அளவிற்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு,  கிலோ 70 முதல் 85 ரூபாய் வரையில் விற்கப்பட்டுள்ளது.

Also Read : சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை இடமாற்றம்?

முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து, தக்காளி விலை வெளிச்சந்தையில் கட்டுப்படுத்தப்படும் வரை, நாளை முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமும், தக்காளி விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது. தேவையின் அடிப்படையில் நியாய விலைக்கடைகளிலும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்துள்ளார்.

First published:

Tags: Ration Shop, Tomato, Tomato Price