மூவர்ணக் கொடி அச்சிடப்பட்ட முகக்கவசம் - திருப்பூரில் வேகமெடுக்கும் விற்பனை

74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ணக் கொடி அச்சிடப்பட்ட முகக்கவசம் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

மூவர்ணக் கொடி அச்சிடப்பட்ட முகக்கவசம் - திருப்பூரில் வேகமெடுக்கும் விற்பனை
மூவர்ணக் கொடி அச்சிடப்பட்ட முகக்கவசம்
  • News18
  • Last Updated: August 13, 2020, 4:10 PM IST
  • Share this:
இந்திய நாட்டின் 74வது சுதந்திர தினம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சனிக்கிழமை அன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
எப்போதும் சுதந்திர தினத்திற்கு முன்பாக தேசிய கொடிகள், மூவர்ண தோரணங்களுக்கான ஆர்டர்கள் மற்றும் விற்பனை அதிகரித்து காணப்படும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாதது, மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் என பல காரணங்களால்  மூவர்ண கொடிகளுக்கான ஆர்டர்கள் பெருமளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது ‌.


எனினும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மக்கள் அத்தியாவசிய பொருளாய் பயன்படுத்தும் முகக்கவசங்களில் மூவர்ண கொடியை அச்சிட்டு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

Also read... கடந்த 5 ஆண்டுகளாக உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

ஆரம்ப நிலையில் முகக்கவசங்களை மக்களிடையே பிரபலப்படுத்தவும் விற்பனையை அதிகரிக்கவும் நடிகர்கள் உருவம் அச்சிட்ட முகக்கவசங்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது மக்களின் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் மூவர்ண கொடி அச்சிடப்பட்ட முக்ககவசங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.மேலும் இத்தகைய முகக்கவசங்கள் வேகமாக விற்பனையாகி வருவதால் ஆர்டர்களும் குவிந்து வருவதாக பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
First published: August 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading