சென்னையில் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் அதிகரித்திருப்பதாக பால்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மூலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்வதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, 2017-18 ஆம் ஆண்டு 11.91 லட்சம் லிட்டராகவும், 2018-19 12.09 லட்சம் லிட்டராகவும், 2019-20 12.11 லட்சம் லிட்டரும், 2020-21- 12.63 லட்சம் லிட்டராக இருந்த நாளொன்றுக்கு விற்பனை ஆகி வந்தது. இந்த நிலையில் 2021-22 ஆம் ஆண்டில் 13.36 லட்சம் லிட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளதாவும் பால்வளத் துறை தெரிவித்துள்ளது.
2021-22ம் ஆண்டில் சென்னை பெருநகர பால் விற்பனை சராசரியாக நாள் ஒன்றுக்கு 13.36 லட்சம் லிட்டராக உள்ளதாகவும், மேலும் 2022-23ம் ஆண்டில் 15 லட்சம் லிட்டராக விற்பனையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் - வானிலை மையம்
மேலும் பால் வளத் துறையில் 36 புதிய அறிவிப்புகளை அமைச்சர் நாசர் வெளியிட்டார். அதில், இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும். அச்சரப்பாக்கத்தில் நாள்தோறும் இரண்டு லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உடைய பால்பண்ணை 71.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
தூய பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 50 எண்ணிக்கையில் தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும். நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாள்தோறும் இரண்டு லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை 50 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளையும் அமைச்சர் நாசர் வெளியிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.