தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

தமிழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊதிய விகிதங்களை மறுநிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்களது சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

  இதையடுத்து, தமிழக நியாய விலைக் கடைகளில் பணியாற்றி வரும் 20,448 விற்பனையாளர்கள், 3,345 கட்டுநர்கள் ஆகியோரின் நலன் காக்கும் வகையில், அவர்களது ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் 5000 ரூபாயிலிருந்து, 6250 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

  மேலும் படிக்க...விளாத்திகுளம் அருகே செல்போன் தராததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

  ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியம் 8600 ரூபாயிலிருந்து, 29000மாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் 4250 ரூபாயிலிருந்து 5500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டு பணி முடித்த கட்டுனர்களுக்கு காலமுறை ஊதியமாக 7,800 ரூபாயிலிருந்து, 26,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க... பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்த 4 மாநிலங்கள்... தமிழக அரசும் குறைக்குமா?  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: