• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு - சட்டப்பேரவையில் அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு - சட்டப்பேரவையில் அறிவிப்பு

டாஸ்மாக்

டாஸ்மாக்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

  • Share this:
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

    தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் விற்பனை பணியாளர்கள்  தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு மாத தொகுப்பூதியம் 500 ரூபாய் கூடுதலாக ஏப்ரல் 2021 முதல் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 25,000 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    கள்ளச்சாரயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி வழங்குதல், மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

    மின் ஆளுமை நடவடிக்கைகளின் கீழ் 74 சேவைகளை இணையவழி மூலம் வழங்குதல், தேனி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவிற்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணயிடம் உருவாக்குதல் உள்ளிட்ட அறிவிப்புகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: