'கள்ள வாக்குகளுக்காக போலி ஆவணங்கள் திமுக தயாரிக்கிறது ' - சைதை துரைசாமி

'கள்ள வாக்குகளுக்காக போலி ஆவணங்கள் திமுக தயாரிக்கிறது ' - சைதை துரைசாமி

சைதை துரைசாமி

கள்ள வாக்குகளுக்காக போலி ஆவணங்கள் தயாரிக்கும் பணிகளை திமுக அண்ணா அறிவாலயத்திலேயே செய்கிறது என சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தேர்தல் களம் வேண்டாம் என ஒதுங்கி இருந்தேன். ஆனால் மக்களும் கட்சியும் போட்டியிட விரும்பியதால் போட்டியிடுகிறேன் என அதிமுகவின் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

  அதிமுகவின் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் சைதை துரைசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வழக்கு நிலுவையில் உள்ளது என திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியம் வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்தார். அது எது தொடர்பான வழக்கு என கேள்வி கேட்டிருந்தேன். பொது தளத்தில் விவாதிக்கலாம் என பதிலளித்தார். ஆனால் எங்கே என இதுவரை பதிலளிக்கவில்லை

  கிண்டி லேபர் காலணியில் மா.சுப்ரமணியன் வீடுகளை அபகரித்துள்ளார். தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட வீட்டை மா.சுப்ரமணியம் மனைவியின் வீடு என கடந்த தேர்தலில் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
  மேயர் பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து வீட்டை அபகரித்துள்ளார். தேர்தல் களம் வேண்டாம் என ஒதுங்கி இருந்தேன். ஆனால் மக்களும் கட்சியும் போட்டியிட விரும்பியதால் போட்டியிடுகிறேன்.  கள்ள வாக்குகளுக்காக போலி ஆவணங்கள் தயாரிக்கும் பணிகளை திமுக அண்ணா அறிவாலயத்திலேயே செய்கிறது. 2006 உள்ளாட்சி தேர்தலில் திமுகவில் சேர சொல்லி எனக்கு அழைப்பு வந்தது.
  நான் மறுத்துவிட்டேன். நீங்கள் வரவில்லை என்றால் மக்களால் தேர்வு செய்யும் முறையை மாற்றுவோம் என்று மிரட்டினார்கள். அதன்பிறகுதான் முறை மாற்றப்பட்டது

  சைதை தொகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளதாக மா.சுப்ரமணியன் சொல்கிறார். இருக்கும் 998 தெருக்களில் எப்படி 1 லட்சம் மரக்கன்றுகள் நட முடியும் என சைதை துரைசாமி கேள்வி எழுப்பினார்.
  Published by:Sankaravadivoo G
  First published: