புதிய கல்வி கொள்கை பற்றிய நடிகர் சூர்யாவின் தைரியமான கருத்து வரவேற்கத்தக்கது என்று சைதை சட்டமன்ற உறுப்பினர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதி 170-வது வார்டு சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன். இவர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 8 இலட்சம் செலவில் சென்னை மடுவின்கரை மேல்நிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறந்து வைத்தார். அத்துடன் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை 7லட்சம் ரூபாய் செலவில் வழங்கினார்.
இதேபோல ஈக்காட்டுதாங்கல், பூந்தமல்லி சாலை அருகில் ரூபாய் 13 இலட்சம் செலவில் நியாய விலைக்கடை கட்டும் கட்டுமான பணி துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. இந்த திட்டப்பணிகளை எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “
புதிய கல்வி கொள்கை குறித்து நாடு முழுவதும் எதிர்ப்பு குரல் தொடர்ந்து எழுந்து வருகிறது. புதிய கல்வி கொள்கை பற்றிய நடிகர் சூர்யாவின் தைரியமான கருத்து. அது வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.
மேலும் படிக்க...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.