ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிப்பு

எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிப்பு

எழுத்தாளர் மு.ராஜேந்திரன்

எழுத்தாளர் மு.ராஜேந்திரன்

எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசின் வேளாண் துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மு.ராஜேந்திரன். இவர் எழுதிய 'காலாபாணி' நாவலுக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காளையார் கோவில் போரை அடிப்படையாக கொண்டு காலா பாணி நாவல் எழுதப்பட்டுள்ளது.

சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் மு.ராஜேந்திரன் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதில், இந்த நாவல் கொரோனா காலக்கட்டத்தில் சிவகங்கையில் வெளியானது. இளைஞர்கள் வரலாற்று புத்தகங்களை விரும்பி படிக்கின்றனர். குறிப்பாக நமது வரலாற்றை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

காலா பாணி நூலுக்கு வரவேற்பு இருக்கும் என்றே நான் எதிர்பார்த்தேன். இதற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். இந்த நாவலில் அதிகம் அறியப்படாத ஜெகநாதன் ஐயர், மனக்காடு சாமி, மருதுபாண்டியர் மகன் 15 வயது சிறுவன் துரைசாமி ஆகியோரை குறித்து எழுதியது சந்தோசமாக இருந்தது என்று தெரிவித்தார்.

First published:

Tags: Sahitya Akademy Award