மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் - சகாயம் ஐ.ஏ.எஸ்

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் - சகாயம் ஐ.ஏ.எஸ்

சகாயம் ஐஏஎஸ்

நல்லவர்கள் யார் என்பதை இளைஞர்கள் அடையாளம் கண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.

  • Share this:
வேளாண் சீர்திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என மக்கள் பாதை அமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சகாயம் தெரிவித்துள்ளார்.

வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சைக்கிள் பேரணி மேற்கொண்ட இளைஞர்களுக்கு, சென்னையில் உள்ள மக்கள் பாதை அமைப்பின் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டார் சகாயம்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு வேளாண் சீரிதிருத்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு.

மத்திய அரசு வேளாண் சீர்திருத்த சட்டங்கள் தொடர்பாக கொடுக்கின்ற வாக்குறுதிகளில் நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தவறு இழைக்கின்ற அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து புகார்கள் வருகின்ற போதே தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தூய்மையான அரசியல்வாதிகள் இல்லை. இளம் தலைமுறையினர்தான் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள்.

Must Read: ஐபேக் குழுவினரோடு எந்த பிரச்னையும் இல்லை, திருச்சி மாநாடு திட்டமிட்டப்படி நடைபெறும் - கே.என்.நேரு

 

நல்லவர்கள் யார் என்பதை இளைஞர்கள் அடையாளம் கண்டு கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முன்வர வேண்டும்.” இவ்வாறு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கூறினார்.
Published by:Suresh V
First published: