கிறிஸ்தவ மதத்தை பரப்பவே சகாயம் ஐஏஎஸ் பதவியைவிட்டு விலக முடிவு செய்துள்ளார் - இல.கணேசன்

சகாயம் ஐஏஎஸ் அதிகாரத்தில் இருக்கும் போதே கிறிஸ்துவ மதத்தை பரப்பியவர் என்றும் தற்போது முழுமையாக மதத்தைப் பரப்பவே பதவி விலகுவதாக தான் நினைப்பதாகவும் இல.கணேசன் கூறியுள்ளார்.

கிறிஸ்தவ மதத்தை பரப்பவே சகாயம் ஐஏஎஸ் பதவியைவிட்டு விலக முடிவு செய்துள்ளார் - இல.கணேசன்
பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்.
  • Share this:
சென்னை கிண்டியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பாஜக சார்பில், அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் அக்கட்சியின் மாநில துணை தலைவர் எம்.என்.ராஜா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இல.கணேசன் கூறுகையில், சுதந்திரத்திற்காக நடைப்பெற்ற போராட்டத்திற்கு தலைமைத்தாங்கி வெற்றிகரமாக நடத்தப்பட்ட காரணத்தால் சர்தார் என்று அழைக்கப்பட்டார். மேலும், மனதளவில் மிக உறுதியானவர். ஆண்டு தோறும் அவர் பிறந்த நாளில் மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில் தான் பா.ஜ.க சார்பில் இன்றும் மரியாதை செலுத்தப்பட்டது.

பாஜக சார்பில் வேல் யாத்திரை நீண்ட நாட்களுக்கு முன்பே திட்டமிட்டுவிட்டோம். திருமாவளவனைச் சார்ந்தவர்கள் கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். எனவே இதற்கு அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறிய அவர், யாத்திரை கட்சி அமைப்பு ரீதியான திட்டமிடப்பட்டுள்ளது. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறினார்.


Also read: தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை: ஹோலோகிராபிக் 3D முறையில் பிரச்சாரம் செய்ய திட்டம்?இந்நிலையில் அரசிற்கு இதை தடுக்க எந்த காரணமும் இல்லை என்ற அவர், நாங்கள் பேசி இதற்கு அனுமதி வாங்குவோம் என்றார். அதுமட்டுமின்றி பாஜகவிற்கு மக்கள் மத்தியில் அதிகம் புகழ் கூடி விடுமோ என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருக்கிறது என்றும் அவர் சாடினார்.

எந்த கேள்விக்கும் பதில் கூற முடிந்த என்னால், ரஜினிக்காக மட்டும் பதில் கூற முடியாது என்றார். மேலும், ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து யாராலும் கணிக்க முடியாது என்றும் அவரே கூறினால் மட்டும்தான் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் ரஜினி எது செய்தாலும் சரியாகத்தான் செய்வார். எனவே, பதில் கூற வேண்டியவர் ரஜினி தான் என இல.கணேசன் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், சகாயம் ஐ.ஏ.எஸை அரசாங்கம் அனுப்பவில்லை. அவர் அதிகாரத்தில் இருக்கும் போதே கிறிஸ்துவ மதத்தை பரப்பியவர். தற்போது முழுமையாக மதத்தைப் பரப்ப வேண்டும் என பதவி விலகுகிறார் என நினைக்கிறேன் என்றார்.
First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading