12-ம் வகுப்புக்கான பொதுத் தமிழ் புத்தகத்தின் அட்டைப் படத்தில் உள்ள பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
2019-20 ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள், மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் வழங்கப்பட்டது. அந்த வகையில் 12-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் பாரதியின் தலைப்பாகை காவி வண்ணத்தில் அச்சிடப்பட்டிருந்தது.
இது அரசியல் கட்சியினரிடமும் மக்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவரான வளர்மதி பேசுகையில், “ மாநில அரசால் வழங்கப்பட்ட பாடப்புத்தகமான இதில் அரசியல் மற்றும் மதம் போன்றவற்றிற்கு இடமில்லை. இது தவறுதலாக நடந்திருக்கும். மேலும் இது ஆராயப்பட்டு சரிசெய்யப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.