எம்ஜிஆர் சிலை அவமதிப்பு.. ஆட்சியரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் மனு

எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஆட்சியரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனர்.

எம்ஜிஆர் சிலை அவமதிப்பு.. ஆட்சியரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் மனு
ஆட்சியரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் மனு.
  • Share this:
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வில்லியனூர் பகுதியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித் துண்டு அணிவித்துவிட்டுச் சென்றனர். இதைக் கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் மற்றும் காவல்துறை இயக்குநரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Also read: சென்னையில் மாஞ்சா நூலால் இரவில் காவலர் தம்பதிக்கு நேர்ந்த சோகம்... இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

இதையடுத்து எம்ஜிஆரின் உருவச் சிலை மீது காவித் துணி போர்த்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்,  அதேபோன்று புறவழிச்சாலை வரும்போது அந்தச் சிலையை மேம்படுத்தி ரவுண்டானா அமைத்து எம்ஜிஆர் சதுக்கம் என்று பெயர் வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அருண் அவர்களிடம் மனு அளித்தனர்.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading